“ஐபிஎல் மாதிரி டி20 லீக்குகளை குறை சொல்ல வேண்டும்.. அழிவுக்கு காரணம்!” – ஏபி.டிவில்லியர்ஸ் அதிரடி!

0
213
Devilliers

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய அணி முதல் முறையாக இரண்டு போட்டிகள் மட்டுமே கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாடியது.

இதுவரையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்தியா உள்நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் திடீரென தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகள் கொண்டதாக குறைக்கப்பட்டது, இரண்டு தரப்பு முன்னாள் வீரர்களுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற ஐசிசி போராடிக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவதை குறைப்பது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்கா டி20 லீக்குக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தென் ஆப்பிரிக்கா இளம் வீரர்கள் கொண்ட அணியை அனுப்பி வைக்கிறது. மூத்த வீரர்கள் அனைவரும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் விளையாட இருக்கிறார்கள். தற்பொழுது இதுவும்விவாதத்திற்கு உட்பட்டு வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணியின் லெஜெண்ட் ஏபி.டிவில்லியர்ஸ் கூறும் பொழுது ” இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இல்லை என்பதில் எனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடையாது. இதற்காக உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 லீக்குகளை குறை சொல்ல வேண்டுமா? எனக்கு இதில் யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை. ஆனால் ஏதோ தவறு இருப்பதாக நான் உணர்கிறேன். இதில் ஏதாவது மாற்றங்கள் வர வேண்டும்.

இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற கேப் டவுன் ஆடுகளம் நல்ல ஆடுகளம்தான். அங்கு ஆரம்பத்தில் பந்து கொஞ்சம் அதிகம் பவுன்ஸ் ஆனது. அதை கடந்து விட்டால் அங்கு பேட்ஸ்மேன்களால் ரன்கள் அடிக்க முடியும் என்பதை நாம் பார்த்தோம்.

இதே மைதானத்தின் ஆடுகளத்தில் பென் ஸ்டோக்ஸ் இரட்டை சதம் அடித்திருக்கிறார். அங்கு நானே சில சதங்கள் அடித்து இருக்கிறேன். மேலும் பிலாண்டர் ரபாடா, சிராஜ், பும்ரா போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ந்து ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீச அனுமதிக்க முடியாது என்று கூறி இருக்கிறார்!