சூரியகுமாருக்கு நடந்த அறுவை சிகிச்சை காரணமே வேற.. ஐபிஎல் விளையாடுவாரா?.. அவரே வெளியிட்ட தகவல்

0
131
Surya

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த காரணத்தினால், இந்திய டி20 அணியை சூரியகுமார் யாதவ் கேப்டனாக வழிநடத்தினார்.

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இறுதிப்போட்டியில் கணுக்காலில் சூரியகுமார் யாதவ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் இந்தியாவில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை தவறவிட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது என செய்திகள் வெளிவந்தன. ஆனால் எதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது? அவருடைய காயத்தின் தன்மை என்ன? என்பது குறித்து நிறைய குழப்பங்கள் நிலவி வந்தன.

மேலும் இந்தியாவில் இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக கொண்டு வந்ததில் அந்த அணிக்குள் நிறைய குழப்பங்கள் நீடித்து வருகிறது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக முக்கியமான வீரராக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். எனவே அவர் காயத்தில் இருந்து குணம் அடைந்து விட்டாரா? ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவாரா? மேற்கொண்டு ஐபிஎல் தொடர் முடிந்து நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்பது குறித்து, நிறைய சந்தேகங்கள் நிலவி வந்த நிலையில், அதற்கு சூரியகுமார் யாதவே பதில் அளித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சூரியகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்பொழுது “அனைவருக்கும் காலை வணக்கம். எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் குழப்பங்கள் நீடித்து வருகிறது. இது குறித்து நான் கொஞ்சம் தெளிவுபடுத்தலாம் என்று விரும்புகிறேன்.

எனக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் நன்றாகிவிட்டது. இதற்காகஎனக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. ஹெர்னியா பிரச்சனைக்காகவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மிக வேகமாக மீட்சி அடைந்து வருகிறேன். உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் உங்களை சந்திப்பேன்” எனக்கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : நியூசியை வென்ற ஆஸி.. “நீ ஒரு லெஜன்ட்யா” – அஸ்வின் கம்மின்ஸ்சுக்கு மனம் திறந்த பாராட்டு

எனவே இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து டி20 உலகக்கோப்பையிலும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த செய்தி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.