நியூசியை வென்ற ஆஸி.. “நீ ஒரு லெஜன்ட்யா” – அஸ்வின் கம்மின்ஸ்சுக்கு மனம் திறந்த பாராட்டு

0
526
Ashwin and Pat Cummins

கடந்த 31 வருடங்களில் ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மிகப்பெரிய ஆதிக்கத்தை டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்து வருகிறது. 1993 முதல் நியூசிலாந்துக்கு எதிராக மொத்தம் 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா 26 டெஸ்ட் போட்டிகளை வென்று இருக்கிறது. நியூசிலாந்து ஒரே ஒரு போட்டியை மட்டுமே வென்று இருக்கிறது. இரண்டு போட்டிகள் டிராவில் முடிவடைந்து இருக்கின்றன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்துக்கு சென்றது. இதற்கு முன்பு உள்நாட்டில் நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்று இருந்தது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து ஆஸ்திரேலியா அணி நியூசிலாந்துக்கு எதிராக தொடரை வெல்வது மிக முக்கியம் என்கின்ற நிலையில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் அதிரடியாக 174 ரன்கள் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தார்.

இதற்கடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 279 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு முதல் ஐந்து விக்கெட்டுகள் 80 ரன்களுக்கு விட்டது. அடுத்து மிட்சல் மார்ஸ் 80 ரன்கள் அதிரடியாக எடுத்தார். 220 ரன்கள் ஆஸ்திரேலியா நீ எடுத்திருந்தபொழுது மார்ஸ் மற்றும் ஸ்டார்க் என அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது.

ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு மேலும் 59 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மூன்று விக்கெட் மட்டுமே கைவசம் இருந்தது. இந்த நிலையில் காரி உடன் சேர்ந்த கேப்டன் பாட் கம்மின்ஸ் 44 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 32 ரன்கள் எடுத்து, அவருடன் சேர்ந்து ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்த இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் மிக முக்கியமான 23 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் மற்றும் ஆட்டம் இழக்காமல் முக்கியமான 32 ரன்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “இது அதுக்கான நேரம் இல்ல”.. சச்சின் பேச்சுக்கு சர்துல் தாக்கூர் மறைமுக எதிர்ப்பு

தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியை மிகச்சிறப்பான வெற்றிகளுக்கு அழைத்துச் செல்லும் கேப்டன் கம்மின்ஸ் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் “பேட் கம்மின்ஸ் லெஜன்ட். கேரியுடன் இணைந்து புகழ்மிக்க வேலைகளை செய்தார். ஆஸ்திரேலியாவின் கோடை காலத்திற்குப் பிறகு தொடர்ந்து அலெக்ஸ் கேரிக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு, தற்பொழுது அவர் சிறந்த வெற்றியை கொடுத்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்