சூரியகுமார் இஷான் கிஷான் ரோஹித் சர்மாவுக்கு தேவைப்பட மாட்டார்கள் – முகமது கைஃப் ஓபன் டாக்!

0
1769
Rohitsharma

இந்தியாவிற்கு தலா மூன்று போட்டிகள் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி வந்துள்ளது!

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியிடம் டி20 தொடரை இழந்த இலங்கை அணி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் தொடர் முடிவடைந்து அடுத்து நியூசிலாந்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட இந்தியா வருகிறது.

இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை தொடர்கள் போலவே ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கும் ரோகித் சர்மா ஒரு நாள் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதே சமயத்தில் கே எல் ராகுல் ஒருநாள் அணியிலிருந்து ஓய்வு கேட்டு வாங்கி இருக்கிறார். இதன் மூலம் இசான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் நியூசிலாந்து அணி உடனான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

தற்பொழுது இவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் அணியில் வாய்ப்பு குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் “இது மிகவும் கடினமான ஒன்று. கில், ராகுல் இருவரும் இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் நல்ல ரன்களை கொடுத்துள்ளார்கள். அதே சமயத்தில் இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் நம்மை அணியில் எடுக்க சொல்லி தூண்டும் வகையில் பேட்டிங் செய்யக் கூடியவர்கள். கில் இன்னிங்சை தொடங்கி நல்ல ரன்களை பெறுகிறார். அதேபோல் கே எல் ராகுல் இன்னிங்ஸை நல்ல முறையில் முடித்து வைத்து ரன்களை பெறுகிறார். கடைசி ஆட்டத்தில் அவர் பேட்டிங் செய்த விதம் மிக அருமையாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” ரோகித் சர்மாவிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவர் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவர் தனது வீரர்களான கில் மற்றும் ராகுலுக்கு நீண்ட வாய்ப்பு வழங்க விரும்புகிறார். அவர்களும் அதற்கேற்றார் போல் ரன்களை இந்த வடிவத்தில் கொடுத்துள்ளார்கள். எனவே ரோகித் சர்மாவின் முதல் தேர்வில் இவர்கள்தான் இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்!