இந்திய கிரிக்கெட்

சூரியகுமாருக்கு பேட்டிங் வர பயம்.. உண்மையே இதுதான்.. இல்லனா அந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க – முகமது கைஃப் விமர்சனம்

நேற்று இரண்டாவது டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வராதது மிகவும் தற்காப்பான முடிவு என முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி 214 ரன்கள் துரத்த வேண்டிய நிலையில் முதல் ஓவரிலேயே கில் விக்கெட்டை இழந்ததும், உள்ளே வந்து பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த வேண்டிய சூரியகுமார் யாதவ் வராமல் பௌலிங் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் கொண்டுவரப்பட்டார். இந்த முடிவு பெரிய அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.

இது தேவையில்லாத தற்காப்பு

இது குறித்து முகமது கைஃப் பேசும்பொழுது “சூரியகுமார் யாதவ் ஏன் பேட்டிங் செய்ய மூன்றாவது இடத்தில் வரவில்லை? அவர்தான் கேப்டன் என்பதோடு இலக்கு பெரிதாக இருக்கின்ற காரணத்தினால் அவர்தான் பொறுப்பேற்று விளையாடி இருக்க வேண்டும். ஒரு ஓவருக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், சீமிங் கண்டிஷனில், பந்து கொஞ்சம் பழையதாக மாறட்டும் என்று நீங்கள் அக்சர் படேலை அனுப்புகிறீர்கள்”

“பந்து பழையதாக மாறவேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் அடித்து விளையாட வேண்டும். நீங்கள் தாக்குதல் முறையில் பெரிய ஷாட் ஆட வேண்டும். உங்களிடம் அவ்வளவு சக்தி வாய்ந்த ஹிட்டர்கள் வெளியில் அமர்ந்திருக்கிறார்கள். சூரியகுமார் யாதவ் ஒரு சிறந்த டி20 பேட்டர். அவர் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்கிறார். பின்பு தேவையான ரன் விகிதம் அதிகரிக்கும் பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்?”

- Advertisement -

நீங்கள் செய்தது தவறு

“நீங்கள் அக்சர் படேலை அனுப்பும் முடிவை எடுத்தது மிகப்பெரிய தவறு. பெரிய இலக்கை துரத்தும் பொழுது விக்கெட்டுகள் விழுந்து இருந்தால் அவர் ஐந்தாவது இடத்தில் வந்து பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இருப்பார். நீங்கள் இந்த இலக்கை துரத்துவதற்கு சரியான எட்டு பேட்ஸ்மேன்கள் உடன் விளையாடி இருக்கிறீர்கள். நீங்கள் முழுமையாக தாக்குதல் பேட்டிங் முறைக்கு சென்று இருக்க வேண்டும். இதை செய்யாததும் பெரிய தவறு”

இதையும் படிங்க : எங்களுக்கு இன்னும் 8-9 மேட்ச் இருக்கு.. நாங்க பண்ற சில விஷயங்கள் இதுக்காகத்தான் – இந்திய துணைப் பயிற்சியாளர் பேட்டி

” மேலும் இந்த போட்டியில் பனிப்பொழிவின் பங்கு என்ன இருந்தது? குளிர்ச்சியான சூழ்நிலையில் விளக்கு வெளிச்சத்தில் பந்து நன்றாக நகர ஆரம்பித்தது. அபிஷேக் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் மூன்று பேரும் பின்புறமாகவே ஆட்டம் இழந்தார்கள். இந்தப் பந்துகள் ஹார்ட் லென்த்தில் இருந்து வந்தவை. தென் ஆப்பிரிக்க பவுலிங் யூனிட் ஒழுக்கமான லென்த்தில் பந்துவீசி போட்டியை வென்றனர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts