இனிமே இந்த இந்திய வீரரை ஓபனிங் இறங்க சொல்லுங்க, ரோகித் சர்மாவுடன் செம்ம காம்போ – பாகிஸ்தான் முன்னாள் வீரர் பேட்டி!

0
132

சூரியகுமார் யாதவை துவக்க வீரராக களம் இறக்குங்கள் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா.

ஆசிய கோப்பைக்குச் செல்லும் இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். காயம் காரணமாக சிகிச்சையில் இருந்த கேஎல் ராகுல், கொரோனா தொற்று காரணமாக மேற்கிந்திய தொடரில் விளையாட முடியாமல் போனது. தற்போது மீண்டும் அணிக்குள் வந்திருப்பது கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

காயம் காரணமாக கேல் ராகுல் வெளியே இருந்த போது இசான் கிசன், சூரியகுமார் யாதவ் போன்றோர் துவக்கவீரர்களாக பயன்படுத்தப்பட்டனர். சூரியகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மாவின் கூட்டணி இதற்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளில் நன்றாக அமைந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒரு சில போட்டிகளில் சூரியகுமார் சரியாக விளையாடவில்லை என்றாலும் முக்கியமான போட்டியில் இந்த காம்போ மிகச் சிறப்பாக அமைந்தது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்கு டி20 போட்டிகளில் துவங்கிய சூரியகுமார் யாதவ் அடித்த ரன்கள் முறையே 24, 11, 76, 24 ஆகும்.

மெல்ல மெல்ல இந்த ஜோடியின் துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது. ஆகையால் ஆசிய கோப்பையில் இந்த ஜோடியின் துவக்கம் எப்படி அமையப்போகிறது என்பதை காண்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“சூரியகுமார் யாதவை துவக்க வீரராக காண்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். ரோகித் சர்மாவுடன் அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. மேலும் ஒருவரை பற்றி மற்றொருவர் நன்கு தெரிந்து வைத்திருப்பர். ஐபிஎல் போட்டிகளில் இந்த ஜோடியின் துவக்கம் பல போட்டிகளில் நன்றாக அமைந்திருக்கிறது. ஆகையால் ஆசியக் கோப்பையிலும் இவர்களின் துவக்கத்தை காண்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் நான் காத்திருக்கிறேன். கேஎல் ராகுல் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். அவர் கீழ் வரிசையில் களமிறங்க வேண்டும். பினிஷிங் ரோல் அவருக்கு மிகவும் சரியானதாக அமையும். வெவ்வேறு இடங்களில் களமிறங்கி அவர் நன்றாக விளையாடியிருக்கிறார். ஆகையால் ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் இருவரின் துவக்கம் வேறு ஒரு கோணத்திற்கு போட்டியை எடுத்துச் செல்லலாம் என்று நான் நம்புகிறேன்.” என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.