ஸ்பின்னர்களை போட்டு பொளந்துகட்டிய ஆளு சூரியகுமார், இப்போ இப்படி ஆடுறாருன்னா சுத்தமா நேரம் சரியில்லை – ரோகித் சர்மா பேட்டி!

0
1354

ஸ்பின்னர்களை பூந்து விளையாட கூடிய சூரியகுமார் யாதவ், இப்படி ஆட்டமிருந்திருக்கிறார் என்பது சற்று வருத்தமாக இருக்கிறது. அவருக்கு நேரம் சுத்தமாக சரியில்லை என்று எனது பேட்டியில் கூறியுள்ளார் ரோகித் சர்மா.

நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்தியாவிற்கு படு மோசமாகவே முடிந்திருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக விளையாடி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது இந்திய அணி.

- Advertisement -

இரண்டாவது போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு மூன்றாவது போட்டி சிறப்பாகவே துவங்கியது. ஆஸ்திரேலிய அணியை 269 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இதைச் சேஸ் செய்த போது நல்ல துவக்கமும் கிடைத்தது. அதன் பிறகு அந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால், இறுதியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தொடரையும் இழந்தது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் பிளேயிங் லெவனில் எடுத்து வரப்பட்டு விளையாட வைக்கப்பட்டார். முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடிய முதல் பாலில் ஒரே மாதிரியாக மிட்ச்சல் ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்து பேரதிர்ச்சியை கொடுத்தார். இதற்கு கடும் விமர்சனங்களையும் சந்தித்து வந்தார்.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் உடனடியாக இவரை இறக்காமல், டி20 போட்டிகளில் எப்படி 15-18 ஓவர்கள் விளையாடுவாரோ அதற்கு ஏற்றவாறு 5 விக்கெட்டுகள் போனபிறகு களமிறக்கப்பட்டார். ஆனால் இதிலும் வந்த முதல் பந்தில் இம்முறை சுழல் பந்துவீச்சாளரிடம் ஆட்டமிழந்தார். இதனால் சூரியகுமார் யாதவின் எதிர்காலம் ஒருநாள் போட்டிகளில் கேள்விக்குறியாகியுள்ளது.

- Advertisement -

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரோகித் சர்மா, “இந்த தொடரில் பெரும் மூன்று பந்துகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதை வைத்து என்ன கருத்து கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. இந்த மைதானத்தில் எப்படி சுழல் பந்துவீச்சு எடுபடும் என்று நன்றாகவும் உணர்ந்தவர் அவர்.

மேலும் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக நாம் சூரியகுமார் யாதவின் பேட்டிங்கை பார்த்திருக்கிறோம். ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக விளையாடிய கூடியவர். அவர் கடைசியாக எதிர்கொண்ட பந்து அவ்வளவு சிறப்பான பந்தும் இல்லை. இதில் அவர் முன்னே சென்று விளையாடி இருக்கலாம். முதல் இரண்டு போட்டிகளில் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து அவர் வெளிவரவில்லை என்று தெரிகிறது. அதனால் அந்த பந்தை பின்னோக்கி சென்று தவறுதலாக விளையாடி ஆட்டம் இழந்திருக்கிறார்.

அவருக்கு அணியில் தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. உடனடியாக எதுவும் முடிவு எடுக்க முடியாது. ஏனெனில் சூரியகுமார் யாதவின் திறமையை அனைவரும் அறிவோம். ஆகையால் அவரது சிறந்த ஆட்டத்திற்கு திரும்புவதற்கு வழிகள் செய்ய வேண்டும். விரைவில் திரும்புவார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இப்போது வரை ஸ்ரேயாஸ் ஐயரின் உடல் நிலை சந்தேகத்தில் இருக்கிறது. அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் ஒருவரே அணியில் இருக்கிறார். அதனால் தான் அவரை விளையாட வைத்தோம். திறமைக்கு ஏற்றவாறு இன்னும் சில வாய்ப்புகள் கொடுத்த பிறகே முடிவு செய்வது நியாயமாக இருக்கும்.” என்றார்.