5 ஆண்டுகளில் 12 முதல்தர போட்டிகள்.. சூர்யகுமார் யாதவ் தேர்வு சரியா? டெஸ்ட் அணியில் தேர்வானது எப்படி?

0
153

இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக மாறி வருபவர்  சூர்யகுமார் யாதவ் . டி20 கிரிக்கெட்டில் மாஸ்  காட்டி வரும் சூர்யகுமார்,பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஆட்டத்தை பார்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் வழங்கப்பட்டுள்ளது.ரிஷப் பண்ட் பதில் சூர்யகுமார் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் டி20 கிரிக்கெட்டில் விளையாடியதை வைத்து டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவை சேர்ப்பது ரஞ்சி கிரிக்கெட்டை கேலி செய்வது போல் ஆகும்.  இதற்கு காரணம், கடைசியாக  5 ஆண்டுகளில் சூர்யகுமார்  வெறும் 12 உள்ளுர் டெஸ்ட்டில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இதில் 2019ம் ஆண்டில் ரஞ்சி கிரிக்கெட்டில் 59.54 சராசரியுடன் 774 ரன்கள் குவித்திருந்தார். இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் பரிட்சையம் பெறாத வீரரை சேர்த்து,  சர்ஃபராஸ் கான் போன்ற வீரர்கள் வாய்ப்பு மறுத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் சுப்மன் கில்லை நடுவரிசையில் களமிறக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கூற்றாக உள்ளது. டி20 போட்டிகளின் சிறப்பாக விளையாடும் சூரியகுமார் யாதவ் அதே பார்மை ஒரு நாள் கிரிக்கெட்டில் தாக்கத்தை ஏற்படுத்த திணறி வரும் நிலையில் அவரை சம்பந்தமே இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் சேர்த்தால் அது சரியாக இருக்காது என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. எனினும் சூரிய குமார்யாதவ் தன் மீது உள்ள விமர்சனத்தை தகடு பொடி ஆக்குவார் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அந்த திறமையும் அவருக்கு இருக்கிறது. இலக்கணப்படி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இது தவறு என்றாலும் புதிய இலக்கணத்தை எழுதுவது தான் எப்போதும் பெரிய பலனை தரும் அந்த வகையில் சூரிய குமார் வரலாற்று சாதனை படைப்பாரா என்பதை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.

- Advertisement -