கேஎல் ராகுல், சூரியகுமார் யாதவா? அர்ஷதீப், தீபக் சஹரா? யாரால் இந்தியாவிற்கு வெற்றி கிடைத்தது – ரோகித் சொன்ன பதில்!

0
302

முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் வெற்றி யாரால் சாத்தியமானது என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் ரோகித் சர்மா.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். துவக்கம் முதலே தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹர் மற்றும் அர்ஷதீப் சிங் இருவரும் இன்-ஸ்விங் அவுட்-ஸ்விங் வீசி திணறடித்து விக்கெட் வீழ்த்தினர்.

- Advertisement -

அர்ஷதீப் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாபிரிக்காவை கதிகலங்க செய்தார். தீபக் சஹர் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, 8 ரன்களுக்கு தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து விட்டது. எய்டன் மார்க்ரம் ஹர்ஷல் பட்டேல் வீசிய ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

இதற்கடுத்து வேகப்பந்து வீச்சாளர் பார்னல் மற்றும் கேசவ மகராஜ் இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெடுக்க முயற்சி செய்தனர். இதில் கேசவ் மகராஜ் மட்டும் 41(35) ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். அஸ்வின் விக்கெட் ஏதும் வீழ்த்தாமல், 4 ஓவர்கள் வீசி பெரும் 8 ரன்கள் மட்டுமே தந்தார்.

எளிய இலக்கை துரத்துவதற்கு களமிறங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிகவும் சோதனையை தந்தனர். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 3 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் பொறுமையாக விளையாட, சூரியகுமார் யாதவ் அதிரடியில் வழக்கம்போல் மிரட்டினார். கே எல் ராகுல் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். சூரியகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடக்கம். இறுதியில் இந்திய அணி 16.4 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது இந்திய அணி போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,

“மைதானத்தில் விக்கெட் ட்ரிக்கியாக இருந்தது. இதுபோன்ற போட்டிகளில் தான் நிறைய கற்றுக்கொள்கிறீர்கள். கடினமான சூழ்நிலையில் அணி என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அப்படி ஒரு விளையாட்டை விளையாடியது நன்றாக இருந்தது. பிட்சில் புல்லைப் பார்த்தால், பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட்டுகள் நன்றாக கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் முழு 20 ஓவர்களுக்கு இது உதவியாக இருக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. பிட்ச் இன்னும் ஈரமாக இருந்தது. இப்படி விக்கெட்டுகளை இழந்ததால் அவர்கள் வீக் என்று நான் கூறமாட்டேன். இன்றைய நாளில் சிறப்பாக விளையாடிய அணி வெற்றி பெற்றது. 

நாங்கள் நன்றாகத் தொடங்கினோம், விரைவான நேரத்தில் 5 விக்கெட்டுகளைப் பெற்றோம், அதுதான் திருப்புமுனையாக அமைந்தது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி இருக்கும் போது, எப்படி பந்துவீச வேண்டும் என்பதற்கான சரியான உதாரணமாக தீபக் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் பந்துவீச்சு இருந்தது. அதேபோல் எங்களுக்கும் பேட்டிங் எளிதாக இருக்காது என்று தெரியும். பிட்ச்சின் போக்கை மதிக்க வேண்டும். விரைவாக இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகும், ராகுல் மற்றும் சூர்யா இடையேயான அந்த பார்ட்னர்ஷிப் எங்களை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது.” என்றார்.