“சூரியகுமார் பேட்டிங்கும் கேப்டன்சியும் ரெண்டும் ஒன்னுதான்.. அவர் வேற மாதிரி!” – பிரசித் கிருஷ்ணா பாராட்டு பேச்சு!

0
948
Surya

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சூரியகுமார் தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.

நேற்று திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் தோற்று பேட்டிங் செய்ய முதலில் கடினமான ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 235 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்டிங்கில் ருத்ராஜ், இசான் கிஷான், ஜெய்ஸ்வால் மூவரும் அதிரடியாக அரைத்ததங்கள் அடித்தார்கள். இறுதிக்கட்டத்தில் வந்த ரிங்கு சிங் 9 பந்தில் 31 ரன்கள் குவித்தார்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணியை ஆரம்பத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் ரவி பிஸ்னோய் மற்றும் அக்சர் படேல் இருவரும் மிகச் சிறப்பாக தடுத்து மூன்று விக்கெட பற்றினார்கள்.

இதற்கு அடுத்து வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மூன்று விக்கெட் கைப்பற்ற, ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக் கனவு15 ஓவர்களில் முடிவுக்கு வந்துவிட்டது. 191 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் கேப்டன் சூரியகுமார் பற்றி பேசி உள்ள பிரசித் கிருஷ்ணா கூறும்பொழுது “சூரியகுமார் பேட்டிங் செய்யும் விதம் மற்றும் அவரது கேப்டன்சி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டுமே மிகவும் ஒத்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

சூரியகுமார் தனது அணி வீரர்களை நம்புகிறார். நாங்கள் செய்ய விரும்பியதைச் செய்ய அவர் எங்களை ஆதரிக்கிறார். நாங்கள் ஏதேனும் தவறு செய்தால் எங்களை ஆதரிக்க அவர் பின்னால் இருக்கிறார்.

இதுதான் விளையாட்டு. இது சுதந்திரத்தைச் சுற்றி உள்ள விஷயமாகும். எனவே அனைவரும் அவரவர் வழியில் திட்டங்களை செயல்படுத்துகிறார்கள். அணியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

மேலும் உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்தது மிகப் பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. எனக்கு கற்றலுக்கு உலகக் கோப்பை இந்திய அணியில் இருந்தது மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது!” என்று கூறி இருக்கிறார்!