சூரிய குமாரின் ரசிகரான ரெஸ்லிங் சூப்பர் ஸ்டார் – ட்விட்டர் இணைப்பு!

0
4436
Sky

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை தன்னுடைய மாயாஜால பேட்டிங்கால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் சூரியகுமார் யாதவ் கடந்த ஆறு மாதங்களில் டி20 கிரிக்கெட் உலகத்தின் சிறந்த பேட்ஸ்மனாக வலம் வந்து கொண்டிருப்பவர் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன சூரியகுமார் யாதவ் .

தற்பொழுது ஐசிசி உலக தர வரிசையிலும் நம்பர் ஒன் டி20 ஆட்டக்காரராக சூரியகுமார் யாதவ் வைத்து வருகிறார் உலக கோப்பையில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் யாதவ் அதனைத் தொடர்ந்து இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியிலும் தன்னுடைய முத்திரையை பதித்துள்ளார் கடந்த ஞாயிறன்று நியூசிலாந்தின் மவுண்ட் மோனியா என்ற இடத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் சூரியக்குமார் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார் .

- Advertisement -

இவர் நேற்று அடித்த இந்த சதமானது உலக கிரிக்கெட் ரசிகர்களாலும் கிரிக்கெட் வல்லுனர்களாலும் டி20 கிரிக்கெட்டின் ஒரு தலைசிறந்த செஞ்சுரி ஆக பார்க்கப்படுகிறது உலகின் அனைத்து மூலையில் இருக்கும் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களுமே இந்த சதத்தை கொண்டாடி வருகின்றனர் இதுகுறித்து ட்விட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பேஸ்புக்கிலும் என எல்லா சமூக வலைத்தளங்களிலும் சூரியகுமார் யாதவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர் .

இந்நிலையில் WWE சூப்பர் ஸ்டார் ஆன ட்ரெவ் மேக்ன்டைர் என்பவருடைய ட்விட் வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது ஆம் நியூசிலாந்துக்கு எதிராக நேற்று சூரியகுமார் யாதவ் ஆடிய அந்த அலாதியான ஆட்டத்தை பற்றி தான் பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்தப் பதிவில் அவர் ” என் மனிதனே மீண்டும் நீதான் கிரிக்கெட் உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்” என்று குறிப்பிட்டுள்ளார் .இந்த ட்வீட் ஆனது ரசிகர்களிடம் வைரலாகி எல்லோராலும் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது

இந்த ட்ரெவ் மேக்ன்டைர் ஸ்காட்லாந்து நாட்டை சார்ந்த மல்யுத்த வீரராவார் இவர் அமெரிக்காவில் பிரபலமான WWE மல்யுத்த போட்டிகளில் பங்குபெற்று உலக ரசிகர்களிடம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -