“சூரிய குமார பாக்க விசித்திரமா இருக்கு.. அவருக்கு எதுவுமே தெரியல..!” – இந்திய முன்னாள் வீரர் கடுமையான விமர்சனம்!

0
1666
Surya

இந்திய அணி நேற்று வெற்றி தோல்வி பாதிக்காத போட்டியில், ஆசிய கோப்பை தொடரில், பங்களாதேஷ் அணிக்கு எதிராக மோதிய போட்டியில், கடைசிக் கட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் முக்கியமான ஐந்து வீரர்களான விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடவில்லை.

- Advertisement -

இவர்களுக்கு பதிலாக திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சர்துல் தாகூர், முகமது சமி ஆகிய ஐந்து வீரர்கள் விளையாடும் வாய்ப்பு பெற்றார்கள்.

இந்த நிலையில் போட்டியின் மிக முக்கியமான கட்டத்தில் இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் மோசமான ஷாட் செலெக்ஷன் காரணமாக ஆட்டம் இழந்தது இந்திய அணியின் வெற்றியை பாதித்தது.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான தோல்வி எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும் கூட, இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மட்டும் இல்லாமல் இந்திய முன்னாள் வீரர்களையும் கோபப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

காரணம், இந்த போட்டியில் வாய்ப்பு பெற்றவர்கள் வெளிப்படுத்திய பேட்டிங் அணுகுமுறை மோசமாக இருந்தது. இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் தங்களுடைய விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்கள். குறிப்பாக சூரியகுமார் யாதவ் பேசுப் பொருளாக மாறி இருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா பேசும்பொழுது “எனக்கு அவரது ஆட்டத்தை பார்க்க விசித்திரமாக இருந்தது. அவர் விளையாட விரும்பிய ஒரே ஷாட் ஸ்வீப் ஷாட் மட்டுமாகவே இருந்தது. அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுவதை நாம் பார்த்திருக்கிறோம். எக்ஸ்ட்ரா கவர், மிட் ஆப் திசைகளில் அவர் நன்றாக விளையாடுவார்.

ஆனால் இது அவருடைய விசித்திரமான இன்னிங்ஸாக இருந்தது. ஏனென்றால் அவர் செய்ய விரும்பியது எல்லாம் ஸ்வீப் ஷாட் மட்டுமே. அவர் கஷ்டப்படுகிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் வெளியேறி செல்லும் பொழுது பந்தை கனெக்ட் செய்ய கொஞ்சம் சிரமம் இருக்கும். அந்த ஷாட்டை ஆட அவர் சிரமப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து அப்படியே சென்றார்!” என்று கூறியிருக்கிறார்!