“டி20 கிரிக்கெட்ல இந்தியாவுல சூர்யா ஒன்னும் பெஸ்ட் கிடையாது!” – டிம் சவுதி அதிரடி கருத்து!

0
12370
Sky

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து நாட்டில் விளையாடுகிறது!

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா துணை கேப்டன் கே எல் ராகுல் விராட் கோலி மற்றும் முகமது சமி போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை!

- Advertisement -

இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை நியூசிலாந்து அணி தீர்மானித்தது.

இந்திய அணி சூரியகுமார் யாதவின் அபார பேட்டிங் மூலம் வந்த சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதற்கு அடுத்து களம் இறங்கிய நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுதி ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் தொடர்ந்து வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

- Advertisement -

போட்டி முடிவுக்குப் பிறகு சூரியகுமார் யாதவ் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட பொழுது ” இந்தியா டி20 கிரிக்கெட் வடிவத்தில் மட்டுமல்ல மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளுக்கும் அற்புதமான வீரர்களை உருவாக்கி இருக்கிறது. நீண்ட காலம் விளையாடி நீண்ட காலம் சாதித்த வீரர்களை இந்தியா பெற்று இருக்கிறது. சூர்யா பல சிறப்பான முறைகளில் அடிக்கக்கூடிய பேட்ஸ்மேன். அவர் கடந்த 12 மாதங்களாக நல்ல ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் சுவாரசியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார்” என்று கூறினார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்தியாவிலிருந்து பல சிறந்த டி20 கிரிக்கெட்டர்கள் வந்திருக்கிறார்கள். சூர்யா தற்பொழுது 12 மாதங்கள் மட்டுமே தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக இருக்கிறார். அவர் இன்னும் இதே போல் தொடர்ந்து விளையாடும்போது தான் அவரை டி20 கிரிக்கெட்டின் இந்தியாவின் சிறந்த வீரர் என்று கூற முடியும் ” என்று தெரிவித்திருக்கிறார்!