இந்தியாவின் பேட் கம்மின்ஸ் இவர்தான்.. தட்டி தூக்குங்க.. சிஎஸ்கேவுக்கு மாஸ்டர் பிளான் போட்ட ரெய்னா

0
1391

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் எந்தெந்த அணிகளை வாங்க முயற்சிக்கும் என்பதை கணிக்கும் வகையில் ஜியோ சினிமாஸ் ஓடிடி-யில் mock ஏலம் நடத்தப்பட்டது.

அதில் சிஎஸ்கே அணி சார்பாக முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார். இந்த ஏலத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் ரூ.14 கோடிக்கும் அதிக தொகைக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டார். சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் ஷர்துல் தாக்கூரை வாங்க தீவிரமாக இருந்தன.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்காக 4 ஐபிஎல் சீசன்களில் விளையாடியுள்ள ஷர்துல் தாக்கூர் இதுவரை 55 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதிலும் 2021ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்ற போது, மிடில் ஓவர்களில் விக்கெட் வேட்டையாடினார் என்றே சொல்ல முடியும். அந்த சீசனில் மட்டும் 21 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 2022ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் டெல்லி அணியால் ரூ.10.5 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அந்த சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், உடனடியாக கேகேஆர் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். ஆனால் கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக போதுமான அளவிற்கு பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் மீண்டும் ஏலத்தில் வந்துள்ளார். இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும் போது, பேட் கம்மின்ஸை போன்ற வீரர் தான் ஷர்துல் தாக்கூர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நிச்சயம் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். கேகேஆர் அணியில் அவர் சரியான பயன்படுத்தப்படவில்லை. அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய போது மிடில் ஓவர்கள் மற்றும் பவர் பிளே ஓவர்களில் சிறந்த அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதேபோல் தீபக் சஹர் மற்றும் பதிரானா இருவருக்கும் எப்போது வேண்டுமானாலும் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஷர்துல் தாக்கூர் சிஎஸ்கே அணி எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகத்தை நன்றாக புரிந்து கொண்டவர் ஷர்துல் தாக்கூர். அவரை தோனியும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அபினவ் முகுந்த் சொன்னதை போல் அவர் மிக முக்கியமான இந்திய பவுலர் என்று தெரிவித்துள்ளார்.