நான் இந்த பையனுக்காக வெயிட் பண்ண முடியல ஐபிஎல்-ல் மினிமம் 600 ரன் எடுப்பார் – ஏபி.டிவிலியர்ஸ் பேச்சு

0
373
Devilliers

நவீன டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு தேவையான எல்லா பேட்டிங் ஆக்ரோஷ அணுகுமுறைகளையும், மிகச் சாதாரணமாக ஒருநாள் கிரிக்கெட்டிலேயே கொண்டு வந்தவர் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற விட்ட அவருக்கு, இன்றளவும் கூட உலகம் முழுக்க நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் ஸ்டைலை எல்லா அணி ரசிகர்களுமே மிகவும் விரும்புவார்கள்.

- Advertisement -

தற்போது ஓய்வுக்கு பிறகு கோல்ப் விளையாடி வரும் ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் பேசுவதற்காக வைத்திருக்கும் யூடியூப் சேனலில் உலக கிரிக்கெட் சார்ந்த பல விஷயங்களை பேசி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரின் என்பதால் ஐபிஎல் தொடர் குறித்த தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார்.

இந்த இரண்டு பசங்களை கவனிங்க

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இரண்டு இளம் வீரர்கள் மீது கவனம் வைக்க வேண்டும் என அவர் கூறி இருக்கிறார். இருவருமே மிகத் திறமைசாலிகள் இந்த முறை மிகவும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

இதில் முதலில் ஏபி டிவில்லியர்ஸ் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய அதே சமயத்தில் வலது கையில் ஆப் ஸ்பின்னும் வீசக்கூடிய ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறும் பொழுது “அவருக்கு எஸ்ஏ டி20 தொடர் நல்லபடியாக அமைந்தது. இதற்கு முந்தைய தொடரில் நல்ல பார்ம்பில் இல்லை. அவர் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். அவர் பந்தை மிக கடினமாக அடிக்கக்கூடிய திறமையான வீரர். மேலும் பந்துவீச்சிலும் அவரால் கொஞ்சம் பங்களிப்பு செய்ய முடியும். மேலும் அவர் ஃபீல்டிங்கில் மிகச் சிறப்பானவர். எனவே அவரையும் கவனியுங்கள்.

- Advertisement -

இதற்கடுத்து ஏபி.டிவில்லியர்ஸ் மிக முக்கியமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய இளம் வீரரான துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் பற்றி மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார். வருகின்ற ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங்கை பார்ப்பதற்காக தன்னால் காத்துக் கொண்டிருக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆர்சிபிக்கு இந்த பையன் நெருப்பு மாதிரி இருப்பான்.. நேர்ல பார்த்தேன் செம ஆட்டிட்யூட் – அஸ்வின் பேட்டி

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்காக நான் காத்திருக்க முடியாத அளவுக்கான வீரர் ஜெய்ஸ்வால். டெஸ்ட் கிரிக்கட்டில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் வெளிப்படுத்துவதற்கான நேரம் வந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கிடைத்த நம்பிக்கையை டி20 தொடருக்கு கொண்டு வருவார். நான் அவரிடமிருந்து பட்டாசுகளை எதிர்பார்க்கிறேன். குறைந்தபட்சம் 500 ரன்கள் எடுப்பார். அதிகபட்சம் என்றால் 600 ரன்கள் தாண்டி அடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.