இந்த ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிரதான சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் விளையாட வேண்டுமா அல்லது வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டுமா? என்பது குறித்து இந்திய முன்னால் வீரர் சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக பதில் அளித்திருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதன்முறையாக இந்திய ஒருநாள் அணியில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் நேற்று முழுமையாக பத்து ஓவர்கள் பந்து வீசி 57 ரன்கள் தந்து ஒரு முக்கிய விக்கெட் கைப்பற்றினார். ஆடுகளமும் அதிகபட்சமாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கம்பீர் மாஸ்டர் பிளான்
தற்போது இந்திய அணியின் ஸ்டிரைக் பவுலர் பும்ரா காயம் அடைந்திருக்கிறார். எனவே பவுலிங் யூனிட்டில் தாக்கத்தை தரக்கூடிய ஒரு வீரர் தேவையாக இருக்கிறார். மர்ம சுழல் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை பல பேட்ஸ்மேன்கள்கள் எதிர்கொண்டு விளையாடியது கிடையாது.
இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் சுற்றில் எதிர்த்து விளையாட இருக்கும் பெரிய அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வருண் சக்கரவர்த்தி ஒரு எக்ஸ் ஃபாக்டராக இருக்கலாம் என கம்பீர் கணித்திருக்கிறார். இதன் காரணமாகவே அவரை திடீரென ஒருநாள் இந்திய அணிக்குள் கொண்டு வந்தார். முதல் போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடியதால் உடனடியாக இரண்டாவது போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை கூட்டிட்டு போங்க
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பிளேயிங் லெவனில் இடம்பெறும் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இடத்திற்கு குல்தீப் யாதவை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது வருண் சக்கரவர்த்தியை தேர்வு செய்ய வேண்டுமா? என்பது குறித்து சுரேஷ் ரெய்னா வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: பும்ரா திரும்பி வருவாரா?.. ஹர்திக் கில் வழியில் முடிவு செய்த பிசிசிஐ.. வெளியான புதிய தகவல்கள்
இதுகுறித்து அவர் பேசும்பொழுது “தற்போது வரும் சக்கரவர்த்தி டி20 கிரிக்கெட்டில் பந்து வீச பழகிவிட்டார் என நான் நினைக்கிறேன். அதே சமயத்தில் குல்தீப் யாதவ் நிறைய வெரைட்டி வைத்திருக்கிறார். மேலும் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்டிருக்கிறார். மேலும் பெரிய போட்டிகளில் வெற்றி பெறக் கூடியவராக இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாபர் அசாம் விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது. அவர் கையில் வித்தியாசமான திறமை இருக்கிறது. அவர் பெரிய போட்டிகளில் பெரிய விஷயங்களை செய்தவர். எனவே இதனால் அவரையே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






