பும்ரா திரும்பி வருவாரா?.. ஹர்திக் கில் வழியில் முடிவு செய்த பிசிசிஐ.. வெளியான புதிய தகவல்கள்

0
293
Bumrah

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து ஒரு முக்கிய செய்தி கசிந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பும்ரா தற்பொழுது காயத்திலிருந்து மீண்டு வருவதற்கான வழிமுறைகளில் இருக்கிறார். கடந்த வாரத்தில் அவர் பெங்களூர் சென்று காயத்திற்கு ஸ்கேன் செய்தார். மேலும் தற்பொழுது என்சிஏ கண்காணிப்புக்குள் அவர் வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அகர்கருக்கு ஏற்பட்டுள்ள தலைவலி

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பும்ரா இல்லை என்றால் அர்ஸ்தீப் சிங் அவருடைய இடத்தில் விளையாடுவார் என கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்ஷித்ராணா இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வெளிப்படையாக தெரிகிறது.

அதே சமயத்தில் பும்ரா மாதிரியான அனுபவ வீரர் இல்லாமல் போகும்பொழுது, அவருடைய இடத்திற்கு முகமது சிராஜை கொண்டு வர வேண்டுமென இந்திய தரப்பில் இருந்து நிறைய கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களது கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். ஒரு பக்கம் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது, இன்னொரு பக்கம் முகமது சிராஜை உள்ளே கொண்டு வர அழுத்தம் அகர்கருக்கு உண்டாகி இருப்பது தலைவலியாக மாறியிருக்கிறது.

- Advertisement -

ஹர்திக் கில் வழியில் பிசிசிஐ

தற்போது பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகி உள்ள ஒரு செய்தியில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் பொழுது காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்காக கடைசிவரை காத்திருந்தது போல, பும்ராவுக்காகவும் கடைசி வரை காத்திருப்பதாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இறுதியில் அவர் கிடைக்க மாட்டார் என்பது 100% உறுதியான பின்னரே அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : ரோகித் ஏன் பிராண்ட்னு இப்ப புரியும்.. ஆனா இதை எப்படி ஈஸியா பண்றார்னு புரியல – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேட்டி

இதே உலக கோப்பையில் ஆரம்பத்தில் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தபொழுதும் மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் பும்ரா விளையாடுவதற்கு ஒரு சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் கூட அதை பயன்படுத்திக் கொள்ள பிசிசிஐ நினைக்கிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிக்கு பும்ரா திரும்பி வந்தாலும் விளையாட வைக்க பிசிசிஐ தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது அவர் முழுமையாக தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவக் குழு கண்காணிப்புக்குள் வந்து விட்டதாக தெரிகிறது. ஆனால் இன்னும் பும்ரா உடல் தகுதி உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -