ஐசிசி தொடரில் மிகவும் ஆபத்தான அணி.. யாரும் அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம் – சுரேஷ் ரெய்னா எச்சரிக்கை

0
238

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதில் பங்கேற்க உள்ள 8 முன்னணி அணிகளும் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரின் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை முதல் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. 8 முன்னணி நாடுகள் பங்குபெறும் இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இதில் முன்னணி நான்கு அணிகளாக கருதப்படும் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணிகளாக கருதப்படுகின்றன.

இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை கைப்பற்றுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கும் அணிகளாக எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா முன்னணி வீரர்கள் இல்லாவிட்டாலும் ஆஸ்திரேலியா அணியை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் எனவே அவர்களை நான் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்கிறேன் எனவும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ரெய்னாவின் விருப்பமான அணி

இதுகுறித்து அவர் கூறும் போது “பெரிய தொடர்களில் ஆஸ்திரேலியா அணி எப்போதும் ஒரு சிறந்த அணியாக இருந்து வருகிறது என்று நான் நினைக்கிறேன். அவர்களிடம் மிகச் சிறந்த அணி மற்றும் மிகச் சிறந்த தலைமை உள்ளது. அவர்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்கிறார்கள். மேலும் அவர்களிடம் ஆக்ரோஷமான மனநிலையும் உள்ளது. அதனால்தான் ஆஸ்திரேலியா அணி எப்போதுமே நான் ஒரு சிறந்த அணியாக நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணி எப்போதும் ஒரு விருப்பமான அணியாகும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:கொஞ்சம் விட்டா அவர் யாருன்னு மறந்திடுவீங்களே.. நான் சாம்பியன்னு திரும்பவும் காட்டுவாரு – இந்திய வீரரின் சிறுவயது கோச்

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அதனால்தான் எனது இறுதிப் போட்டியாளர்களில் அவர்களுக்கு நான் ஒரு இடத்தை கொடுத்துள்ளேன். எனவே ஆஸ்திரேலியா அணியை குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார். ஆஸ்திரேலியா அணியில் ஏற்கனவே கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஹாஸில் வுட் காயம் காரணமாக விலக, ஸ்டார்க் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -