கொஞ்சம் விட்டா அவர் யாருன்னு மறந்திடுவீங்களே.. நான் சாம்பியன்னு திரும்பவும் காட்டுவாரு – இந்திய வீரரின் சிறுவயது கோச்

0
144

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்ற நிலையில் இந்திய அணிக்கு வருகிற 20ஆம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் போட்டி நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மா விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்த சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீப காலமாக மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக கடைசி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி மோசமாக விளையாடுவதை தொடர்ந்து இந்திய அணி தோல்வி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடாத விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் விரைவாக வெளியேற, கடைசி போட்டியில் அரைசதம் அடித்து ஓரளவு பேட்டிங் ஃபார்ம்க்கு வந்தார்.

இந்த நிலையில் ஐசிசி தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடைபெற உள்ள நிலையில், விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் சற்று கவலைப்படும் விதமாக அமைந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் சாம்பியன் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி இந்த முறை நிச்சயமாக கைப்பற்ற முனைப்போடு செயல்படும் நிலையில் விராட் கோலியின் பார்ம் சற்று கவலையளிக்கும் விதத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவரது சிறு வயது பயிற்சியாளர் ஆன ராஜ்குமார் சர்மா விராட் கோலி குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவர் ஒரு சாம்பியன் வீரர்

இது குறித்து ராஜ்குமார் ஷர்மா விரிவாக கூறும் போது ” சில போட்டிகள் மோசமாக இருந்தால் அவர் பார்மில் இல்லை என்று அர்த்தம் கிடையாது. அவரது முந்தைய சாதனைகளை நீங்கள் பார்க்கும் போது அவர் நாட்டுக்காக என்ன செய்தார் என்பதை நீங்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள். அவர் எப்போதும் இருந்த சாம்பியன் வீரரை போலவே செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். மேலும் இந்திய அணிக்கு பும்ரா இல்லாதது துரதிஷ்டவசமானது என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க:81 ரன்.. மாஸ் காட்டிய மந்தனா.. ஜெமிமா போராட்டம் வீண்.. 8 விக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி

ஏனென்றால் பும்ரா ஒரு சிறந்த தேகப்பந்துவீச்சாளர். அவரது இருப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவோம். ஆரம்பகட்டத்திலேயே அவர் முக்கிய திருப்பு முனைகளை கொண்டு வருகிறார். மேலும் பும்ரா டெத் அவர்களின் சிறப்பாக செயல்படுவதால் அவரை நான் நம்பர் ஒன் வந்து வீச்சாளராக கருதுகிறேன்” என்று பேசியிருக்கிறார். இந்திய அணிக்கு முதல் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -