வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்.. தோனி எப்பவுமே இதுல தப்பே செஞ்சதில்லை – சுரேஷ் ரெய்னா பேட்டி

0
157
Raina

சிஎஸ்கே அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வந்த மகேந்திர சிங் தோனி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்திருப்பது உண்மை. இந்த முடிவை அவர் தொடரில் பாதியில் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் அவர் டாஸ் போட வருவது மற்றும் ஆட்ட முடிவிற்கு பின் பேசுவது முடிவிற்கு பின்னால் பேசுவது போன்றவற்றை பார்க்க முடியாது என்பதை ரசிகர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். எந்த போட்டியிலாவது அவர் மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கினால் மட்டுமே பேச அழைக்கப்படலாம். பேட்டிங் கீழ் வரிசையில் வருவதால் இதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி எப்படியாவது பேட்டிங் செய்ய வருவதையாவது பார்க்கலாம் என்று ரசிகர்கள் மைதானத்திற்கு படையெடுக்கிறார்கள். ஆனால் மகேந்திர சிங் தோனியின் பெயர் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. அணி நல்ல விதமாக செயல்படும் பொழுது அவர் அந்த இடத்தில்தான் விளையாடுவார் என்பது உறுதி.

எனவே அவர் களத்தில் விக்கெட் கீப்பிங் செய்வது மற்றும் கேப்டனுக்கு அறிவுரை சொல்வது போன்றவற்றை மட்டுமே இனி ரசிகர்கள் இந்த தொடர் முழுவதும் பார்க்க முடியும் என்கின்ற உண்மை அவர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுக்கிறது. ஆனாலும் மகேந்திர சிங் தோனி தன்னுடைய ட்ரேட் மார்க் ரன் அவுட்டை நேற்றும் தவறாமல் செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

தோனிகிட்ட இது மட்டும் மாறாது

மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராக செய்யக்கூடிய ரன் அவுட் மற்றும் ஸ்டெம்பிங் உலகக் கிரிக்கெட்டில் மிகவும் புகழ் பெற்றது. அவரைப்போல் வேகமாக ஸ்டெம்பிங், துல்லியமாக ரன் அவுட் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். இதில் எப்பொழுதும் அவர்தான் முதல் இடத்தில் இருப்பார். நேற்றும் அனுஜ் ராவத்தை ஸ்டெம்புக்கு பின்னால் இருந்து பந்தை குறித்த தவறாமல் அடித்து ரன் அவுட் செய்து, எத்தனை வயதானாலும் இது மட்டும் மாறாது எனக் காட்டினார்.

- Advertisement -

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “தோனி பல ஆண்டுகளாக இப்படியான ரன் அவுட்டுகளை தவற விட்டதே கிடையாது. அவர் எப்பொழுதும் விக்கெட் கீப்பிங்கில் கடைசி நேரத்தில் கீப்பிங் கிளவுசை கழட்டி விடுவார். இதன் காரணமாக ஃபீல்டர்கள் போல ஓவர் ஆர்ம் த்ரோ அடிப்பார். இதில் அவரது குறி தவறவே தவறாது. மேலும் அவர் களத்தில் ருத்ராஜுக்கு வழிகாட்டிய விதம் பாராட்டுக்குரியது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : விராட் கோலி எவ்வளவு பயிற்சி செய்தாலும்.. இது இல்லாம சிறப்பா விளையாட முடியாது – ரவி சாஸ்திரி பேட்டி

இதேபோல் இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது ” அவர் ஐபிஎல் தொடர் விளையாடாத இந்த ஒரு வருடத்தில் இப்படியான ரன் அவுட் செய்வதற்கான பயிற்சிகளை செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அது அவருடைய ரத்தத்தில் ஆழமாக கலந்து இருக்கிறது. அவர் அரிதாகவே இப்படியானதை தவறவிடுவார். மேலும் அவர் மிகவும் மன அமைதியோடு இருப்பதால்தான் இதில் வெற்றிகரமாக இருக்க முடிகிறது” என்று கூறி இருக்கிறார்