“நிச்சயமாக அவர்கள் பழிவாங்க வருவார்கள்! ஆஸ்திரேலியா அணி இந்த வீரரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! – ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக்!

0
966

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான  நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி  நாளை அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய அணி 2-1  என்ற கணக்கில் வெற்றி பெற்ற முன்னிலையில் உள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி  நாளை தொடங்க இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற  இந்திய அணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. மேலும் இந்த வெற்றி  இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் செல்லும். மறுபுறம் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நிலையில்  இறுதி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும் .

- Advertisement -

இந்த ஆட்டம் நடைபெறும்  அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானமும்  சுழற் பந்துவீச்சு கே சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் மைதானத்தில்  ஆஸ்திரேலியா அணியின் சிறப்பாக பந்துவீசி  இந்திய அணியை குறைவான  ஸ்கோரில்  ஆல் அவுட் செய்தனர். இந்திய பந்துவீச்சாளர்களால் ஆஸ்திரேலியா பதிச்சாளர்களைப் போல  சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் இதைப் பற்றி தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார் பிராட் ஹாக்.

இது பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்” இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு  இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  ரவிச்சந்திரன் அஸ்வின்  மற்றும் அக்சர் பட்டேல்  ஆகியோர் மிகச் சிறப்பாக பொந்து வீசினர். தற்போது  ரவீந்திர ஜடேஜாவும் அவர்களுடன் இருப்பதால்  இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு  நிச்சயமாக ஒரு பழிவாங்கல் திட்டத்துடன் களமிறங்கும்”என தெரிவித்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சு பற்றி தொடர்ந்து பேசிய அவர்” கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள்  சரியான அளவில் பந்து வீசவில்லை. அதன் காரணமாக இந்த போட்டிக்கு பழிவாங்கும் முயற்சியுடன்  அவர்கள் நிச்சயம் ஆட வருவார்கள். இந்திய சுழற் பொந்துவீச்சாளர்களிடமிருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்”என கூறினார்.

- Advertisement -

மேலும் அவர் அக்சர் பட்டேல் பற்றி கூறுகையில்” இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின்  ஒளிரும் விளக்காக  இருக்கப் போகும்  வீரர் அவர்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை விட  அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்ற போகிறார் அக்சர் பட்டேல். அதனால் ஆஸ்திரேலியா அணியினர்  இந்த முறை அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறி எனது பேட்டியை முடித்தார்.