22 சிக்ஸர்.. 287 ரன்கள்.. சன்ரைசர்ஸ் புது வரலாறு.. உடைந்த மிகப்பெரிய 2 சாதனைகள்.. ஆர்சிபி அணி பரிதாபம்

0
1021

தற்போது நடைபெற்று வரும் 17வது ஐபிஎல் லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் அணி புது வரலாறு படைத்திருக்கிறது

இந்த முறை முதலில் பந்துவீச்சை டாஸ் வென்ற பெங்களூர் அணி தேர்வு செய்தது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணி, தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை வெளுத்து விளாசினர் என்றுதான் கூற வேண்டும். அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஜோடி தொடக்க விக்கட்டுக்கு 108 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா 34 ரன்கள் ஆட்டம் இழக்க, அதன் பிறகு மூன்றாவது வரிசையில் அதிரடி ஆட்டக்காரர் ஹென்றிக் கிளாசன் களமிறங்கினார். இவர்கள் இருவரும் அதிரடியாக பெங்களூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தனர்.

சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் வெறும் 41 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 102 ரன்களை குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடங்கும். 102 ரன்கள் குவித்த நிலையில் பெர்குசனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு கிளாஸன் தனது அதிரடியை ஆரம்பிக்க 31 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 67 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார். அதன் பிறகு மார்க்ரம் மற்றும் அப்துல் சமாத் ஜோடி இறுதிக் கட்டத்தில் ருத்ர தாண்டவம் ஆடினர்.

- Advertisement -

17 பந்துகளை ஏற்றுக்கொண்ட மார்கரம் 32 ரன்களும், 10 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அப்துல் சமாத் நான்கு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 37 ரன்கள் குவித்தார். இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி மூன்று முக்கிய ரெக்காடுகளைப் படைத்திருக்கிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் அணிகள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை.. என்ன நடந்தது?

இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக குவித்த 277 ரன்களை, திரும்பவும் இதே அணியே 287 ரன்கள் ஆக பெங்களூர் அணிக்கு எதிராக குவித்து புதிய வரலாறை படைத்திருக்கிறது. ஒரு ஐபிஎல்லில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோராக இது பதிவாகி இருக்கிறது. இப்போட்டியில் அடிக்கப்பட்ட 22 சிக்ஸர்கள் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி அடித்த அதிகபட்ச சிக்சர்கள் ஆகும். மேலும் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை இது இரண்டாவது அதிகபட்ச ரன்னாக பதிவாகி இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் நேபால் அணி 314 ரன்களை மங்கோலியா அணிக்கு எதிராக அடித்தது குறிப்பிடத்தக்கது.