465 ரன்.. டெல்லி அணியை வீழ்த்தியது ஹைதராபாத்.. புள்ளி பட்டியலில் சிஎஸ்கே-க்கு சரிவு

0
329
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்ட போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று இருக்கிறது.

முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் பந்துவீச்சை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வழக்கம்போல் அதிரடியாக ஆரம்பித்தது. அந்த அணி முதல் விக்கட்டுக்கு வெறும் 38 பந்துகளில் 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்கள், டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்கள் எடுத்தார்கள். இறுதிக்கட்டத்தில் நிதிஷ் குமார் ரெட்டி 27 பந்தில் 37 ரன்கள், ஷாபாஷ் அகமது 29 பந்தில் 59* ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. குல்தீப் யாதவ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிடல் பணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரிதிவி ஷா 16(5), டேவிட் வார்னர் 1(3) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அதிரடியாக விளையாடிய ஜாக் பிரேசர் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அபிஷேக் போரல் 42(22), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 10(11), லலித் யாதவ் 7(8) என அடுத்தடுத்து எல்லோரும் வெளியேறினார்கள். தாக்குப் பிடித்து விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்கள் எடுத்தார். 19.1 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நடராஜன் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 4,4,6,4,6,6.. 361 ஸ்ட்ரைக் ரேட்.. வெறும் 18 பந்தில் ஜாக் பிரேசர் மெக்கர்க் புதிய சாதனை

மேலும் ஏழு போட்டிகளில் விளையாடிய ஹைதராபாத் அணி ஐந்து வெற்றிகள் பெற்று நல்ல ரன் ரேட் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. முதல் இடத்தில் ராஜஸ்தான் இருக்க, கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு சரிந்து இருக்கின்றன.