4,4,6,4,6,6.. 361 ஸ்ட்ரைக் ரேட்.. வெறும் 18 பந்தில் ஜாக் பிரேசர் மெக்கர்க் புதிய சாதனை

0
430
Fraser

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனின் 35 வது போட்டியில் டெல்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் இளம் துவக்க பேட்ஸ்மேன் ஜாக் பிரேசர் மெக்கர்க் குறைந்த பந்தில் அரைசதம் அடித்து அதிரடி சாதனை படைத்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்கள், அபிஷேக் ஷர்மா 12 பந்தில் 46 ரன்கள், ஷாபாஷ் அகமத் 29 பண்டில் 59 ரன்கள் என அதிரடியாக விளையாட, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. குல்தீப் யாதவ் நான்கு ஓவர்களுக்கு 55 ரன்கள் 4 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல் அணிக்கு பிரிதிவி ஷா 16 (5), டேவிட் வார்னர் 1 (3) என சொற்ப ரன்களில் உடனுக்குடன் வெளியேறினார்கள். ஆனால் இதற்கு அடுத்து அபிஷேக் போரல் மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் சேர்ந்து ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்கள்.

குறிப்பாக ஆஸ்திரேலியாவின் ஜாக் பிரேசர் மெக்கர்க் அதிரடியில் மிரட்டினார். அவர் வாஷிங்டன் சுந்தர் வந்து வீச்சில் ஒரே ஓவரில் 4,4,6,4,6,6 என 30 ரன்கள் குவித்து மிரட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் குறைந்த பந்தில் அடிக்கப்பட்ட அரை சதமாக அவரது அரைசதம் பதிவானது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜாக் பிரேசர் மெக்கர்க் 18 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். அரைசதம் அடித்த அவரது இன்றைய ஸ்ட்ரைக் ரேட் மட்டும் 361.11 எனப்படும் மிரட்டலாக இருந்தது. இன்னும் இரண்டு ஓவர்கள் சேர்த்து விளையாடி இருந்தால் அவர் சதம் கூட எடுத்திருக்கலாம்

- Advertisement -

இதையும் படிங்க : 4 மெகா சாதனைகள்.. ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 3 முறை.. ஹைதராபாத் டெல்லி அணிக்கு எதிராக அதிரடி பேட்டிங்

இவர் ஏற்கனவே ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 29 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து, ஒட்டுமொத்தமாக உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் என்கின்ற உலகச் சாதனையை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!