2 வாரமா நரைன்கிட்ட கெஞ்சி பாத்துட்டோம்.. ஆனா அவர் அந்த விஷயத்துக்கு சம்மதிக்கவே இல்ல – ஆன்ட்ரே ரசல் பேட்டி

0
6741
Russell

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணியை வென்று கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணியின் ஆல் ரவுண்டர் சுனில் நரை இந்த வெற்றியில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறார். அவர் குறித்து சக கரீபியன் வீரர் ஆன்ட்ரே ரசல் முக்கியமான விஷயம் ஒன்றைப் பேசியிருக்கிறார்.

தற்போதைய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கம்பீர் மென்டராக வந்த பிறகு சுனில் நரைன் துவக்க வீரராக அனுப்பப்பட்டார். இது அந்த அணிக்கு மிக நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. அவர் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்களுடன் 482 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் 180 என்ற மிகச் சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

துவக்க வீரராக வந்து இவ்வளவு பெரிய ஸ்ட்ரைக் ரேட்டில் 400 க்கும் மேற்பட்ட ரண்களை ஒரு பந்துவீச்சாளர் குவித்து கொடுத்து இருப்பது கொல்கத்தா அணி தற்போது சிறப்பான நிலையில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. அவருடைய சிறந்த பார்ம் காரணமாக டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ஆன்ட்ரே ரசல் பேசும் பொழுது ” சுனில் நரைன் சிறப்பாக இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். கம்பீர் அணிக்குள் மென்டராக வந்த பிறகு, அவரை துவக்க இடத்தில் விளையாட வைப்பது குறித்து பேசி இருக்கிறார். அதற்கு முன்பாக அவர் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் வந்தார். அப்படியான இடங்களில் அவர் வருவதால் எந்த பயனும் கிடையாது.

மேலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சுனில் நரைன் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார். ஒரு முதன்மை பந்துவீச்சாளராக இருந்து கொண்டு 500 ரன்கள் பக்கம் அடிப்பது என்பது ஜோக் கிடையாது. மேலும் அவர் 16 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார். சிறப்பான ஆல் ரவுண்ட் திறமையை அவர் வெளிப்படுத்துவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் டி20.. பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது அமெரிக்கா.. இந்திய ஆல்ரவுண்டர் அட்டகாச ஆட்டம்

சுனில் நரை டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று நான் நிச்சயம் நினைக்கிறேன். டி20 உலகக் கோப்பைக்கு வெஸ்ட் இண்டிஸ் அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே அவரை சம்மதிக்க வைக்க நான் முயற்சி செய்தேன். நான் மற்றும் ரூதர்போர்ட் இருவரும் அவரிடம் பேசிக்கொண்டே இருந்தோம். ஒரே ஒரு உலகக் கோப்பை மட்டும் விளையாடிவிட்டு ஓய்வு எடுக்கும்படி கேட்டோம். ஆனால் அவர் ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் அதை நான் மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.