நேரலையில் பரபரப்பு..கங்குலி கேள்விக்கு டிராவிட் அளித்த பதிலால் கடுப்பான கவாஸ்கர்

0
3868

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இந்திய அணி வீரர்களின் சராசரி குறைந்ததற்கு அணி நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

- Advertisement -

இதற்கு பதில் அளித்த பயிற்சியாளர் டிராவிட் இந்திய அணியில் உள்ள டாப் 5 வீரர்கள் நல்ல அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் ஜாம்பவான் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் மைதானங்களிலும் அவர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். தங்களுக்கென்று ஒரு தரத்தை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

ஆனால் நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் தங்களுடைய திறமைக்கு நியாயம் செய்யவில்லை. நிச்சயமாக அவர்கள் தவறு செய்து விட்டார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆடுகளம் பேட்டிங் இருக்கு கடினமாக ஒன்றும் இல்லை.

இந்திய அணி வீரர்களின் சராசரி குறைந்து வருவதும் உண்மைதான் ஆனால் முன்பு போல் ஆடுகளங்கள் அமைக்கப்படுவதில்லை. இந்தியாவில் சுழற்பது வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படுவதால் பேட்டிங் செய்வதை கடினமாக இருக்கிறது.

- Advertisement -

இதேபோன்று உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிக்கு முடிவு வர வேண்டும் என்பதற்காக ஆடுகளம் தயாரிக்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகிறார்கள் என்று டிராவிட் பதில் அளித்தார். ட்ராவிட்டின் இந்த பதில் குறித்து கவாஸ்கரிடம் நெறியாளர் கேள்வி கேட்க அவர் கடுப்பாகி பதில் அளித்தார்.

மற்ற நாட்டு வீரர்களின் சராசரி குறைந்தது குறித்து யாரும் இங்கு கேள்வி கேட்கவில்லை. இந்திய அணி வீரர்களின் சராசரி ஏன் குறைந்தது என்று தான் நாங்கள் கவலைப்படுகிறோம். இதை தடுக்க ஏதாவது செய்தாக வேண்டும். இந்திய அணி தோல்வியை தழுவுவதற்கு பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு இல்லாததே முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்தியாவில் ரன்கள் குவித்து தாதா போல் இருக்கும் பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டில் ஏன் சொங்கி போல் மாறி விடுகிறார்கள். ஒருவேளை பேட்ஸ்மேன்னுக்கு தேவையான பயிற்சி நாம் வழங்கவில்லையா? இல்லை பேட்ஸ்மேன் எந்த இடத்தில் தவறு செய்கிறார்கள் என்பதை கணித்து சொல்லும் தொழில்நுட்பம் இல்லையா?

இது எல்லாம் இருந்தாலும் பேட்ஸ்மேன்கள் சுய பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே முன்னேற முடியும். கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெறும் ஒரு அணி தோற்கும் என்று எனக்கு தெரியும். ஆனால் போராடாமலேயே இப்படி தோற்பது தான் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்திய அணியின் வீரர்களை தேர்வு செய்வதிலும் தவறு இருக்கிறது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.