ஐபிஎல் 2025

விராட் கோலி பைனல் மேட்ச்ல அப்பட்டமா தப்பு செய்யறாரு.. அம்பயர்கள் கண்டுக்கவே இல்ல – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இன்று ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி போட்டியின் நடைபெறு செய்த தவறை நடுவர்கள் கண்டு கொள்ளவே இல்லை என சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆர்சிபி அணி சுமாரான தொடக்கம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணிக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் பில் சால்ட் ஜெமிஷன் வீசிய இரண்டாவது ஓவரில் 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஏழாவது ஓவரின் ஆரம்பத்திலேயே மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன் காரணமாக விராட் கோலி ஒரு முனையில் நின்று கடைசி வரையில் விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. எனவே அவர் பெரும்பாலும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களுக்கு குறி வைக்காமல் 1 ரன்னை 2 ரன்னாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இன்னிசை மெது மெதுவாக கட்டமைத்துக் கொண்டு வந்தார்.

- Advertisement -

கவாஸ்கர் குற்றச்சாட்டு

இந்த நிலையில் லியம் லிவிங்ஸ்டன் உடன் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்த பொழுது மிட் விக்கெட் திசையில் பந்தை தட்டி விட்டு இரண்டு இரண்டுக்கு அழைத்து மிக வேகமாக ஓடினார். அப்பொழுது சீக்கிரத்தில் இலக்கை அடைய வேண்டும் என ஆடுகளத்தின் நடுவே ஓடியதை சுனில் கவாஸ்கர் கவனித்து விட்டார். ஆனால் இது சம்பந்தமாக நடுவர்கள் ஏதும் எச்சரிக்கை செய்யவில்லை.

இதையும் படிங்க : தோனி திட்ட மாட்டாருன்னு தெரியுமா?.. ஸ்ரேயாஸ் ஷஷான்க் சிங் கிட்ட நடந்தது சரிதான் – இர்பான் பதான் ஆதரவு

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” விராட் கோலி விக்கெட்டுக்கு இடையில் எப்பொழுதும் மிக வேகமாக ஓடக்கூடியவர். அவர் அந்த பந்தை அடித்த பொழுது அவருக்கு இரண்டு ரன்கள் என்று மிக நன்றாக தெரியும். அவர் உடனடியாக இரண்டு ரன்கள் என்று கூறிவிட்டு மைதானத்தில் மிக வேகமாக ஓட ஆரம்பித்து விட்டார். ஆனால் அவர் ஆடுகளத்தின் மீது நடுவே ஓடினார். நடுவர்கள் அவரிடம் எதுவுமே இதைப்பற்றி சொல்ல மாட்டார்கள். ஏன் இப்படி நடக்கிறது? பஞ்சாப் இரண்டாவது பேட்டிங் செய்ய வேண்டியது இருக்கிறது” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -
Published by