வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய பவுலிங் லைன்அப் மோசமாகச் செயல்பட்டு வரும் சூழலில், இந்திய அணி நிர்வாகத்தின் பவுலர் தேர்வு மற்றும் முடிவுகள் குறித்து இந்திய முன்னாள் பேட்டர் முகமது கைஃப் தனது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இந்திய அணி நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை குறித்து முகமது கைஃப் பேசும்போது “பும்ராவை அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருக்கும் நிலை உள்ளது. பல பவுலர்கள் உள்ளே வருகிறார்கள், உடனே வெளியே போகிறார்கள். இந்த ட்ரெண்ட் மாற வேண்டும். பவுலர்களைத் தொடர்ந்து ட்ரை செய்வதும், பிறகு டிராப் செய்வதும் மூலம் ஒரு அணியை உருவாக்க முடியாது. அனைவருக்கும் இந்திய கேப் கிடைப்பதால், கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவருமே பவுலிங்கில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்.”
“இது ஒரு தவறான ட்ரெண்ட். ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள். ஃபாஸ்ட் பவுலர்கள் அதிவேகமாக ஃப his-டிராக் செய்யப்படுவதால் உங்களால் அனுபவமிக்க பவுலர்களைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், பொறுமையைக் காட்ட வேண்டும். இதுபோன்ற சூழலில் ஒரு பவுலரால் ஒருபோதும் பெர்ஃபார்ம் செய்ய முடியாது. இதுதான் ஒரே வாய்ப்பு, சிறப்பாகச் செய்யாவிட்டால் டிராப் செய்யப்படுவோம் என்பது அவருக்குத் தெரியும். இந்த உணர்வுகள் பவுலிங்கை மிகவும் பாதிக்கின்றன.”
“இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ரிலாக்ஸ்டான சூழலில் விளையாடுவது மிகவும் முக்கியம். என்ன நடந்தாலும் நீங்கள் ஆறு போட்டிகளில் விளையாடுவீர்கள் என்று அவர்களிடம் சொல்ல வேண்டும். அதை நீங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில், யார் வந்தாலும் பயத்துடனேயே ஆடுவார்கள். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் யாரும் தங்களை நிரூபிக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “குல்தீப் யாதவ் ஒரு போட்டியில் அடி வாங்கியதும் நீங்கள் மாற்றத்தைச் செய்துவிட்டீர்கள். நீங்கள் சீனியர்களுடனும் உறுதியாக நிற்கவில்லை, ஜூனியர்களுக்கும் சப்போர்ட் செய்யவில்லை, தொடர்ந்து மாற்றங்களைச் செய்துகொண்டே இருக்கிறீர்கள். ஒரு அணியை இப்படி ஒருபோதும் உருவாக்க முடியாது. நல்ல விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பைக்கு இன்னும் நேரம் இருக்கிறது. இந்தத் தவறுகளை சரியான நேரத்தில் சரிசெய்ய முடியுமா என்பதுதான் சவால்” என்று கூறி இருக்கிறார்.