இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நிச்சயம் பாகிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் என நம்பிக்கை தெரிவித்து அதற்கான காரணங்களையும் விளக்கி இருக்கிறார்.
நேற்று பாகிஸ்தான் அரசாங்கம் திடீரென டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்தது. இந்த நிலையில் பலரும் பாகிஸ்தான் நிச்சயம் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் என கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” அடுத்த நான்கு ஐந்து நாட்களில் உலகெங்கும் முன்னாள் வீரர்களிடமிருந்து எதிர்ப்புகள் வரத் தொடங்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது முடிவை மாற்றிக் கொள்ளும் என்று நினைக்கிறேன். மேலும் பாகிஸ்தான் வீரர்கள் தாங்கள் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு மீண்டும் விளையாடுவார்கள். அதுபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முடிவை மாற்றிக் கொள்ளும்”
“இது என்ன புதுசா அவர்களுக்கு. முதலில் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வு முடிவை அறிவிப்பார்கள். பிறகு தமிழ் நாட்டு வீரர்கள் தங்களை இன்னும் விளையாட சொன்னதாக கூறி மீண்டும் விளையாட வந்துவிடுவார்கள். இது மாதிரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முடிவை மாற்றிக் கொண்டு விடும்”
“நீங்கள் கடைசி நேரத்தில் விலகுவது முற்றிலும் தவறானது என்று நான் நினைக்கிறேன். நீங்கள் ஆரம்பத்திலேயே இதைச் சொல்லி இருந்தால் இது வேறு விஷயமாக இருந்திருக்கும். எனவே இதில் ஐசிசி தலையிட்டு முக்கிய முடிவை எடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : பாகிஸ்தான் ஏன் ஆணவம்.. எங்க கூட ஆடாம இருக்க தைரியம் இருக்கா?.. முடிஞ்சா செய்யுங்க – ஹர்பஜன் சிங் விமர்சனம்
“ஐசிசி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியாது. ஆனால் இதில் நிறைய கிரிக்கெட் வாரியங்கள் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இது குறித்து ஒரு நபர் முடிவாக இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் இப்படி யாரும் செய்யாத அளவுக்கு முடிவு இருக்கு வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.