இந்திய அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பை போட்டியை புறக்கணிக்கும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு தைரியம் கிடையாது என இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று பாகிஸ்தான் அரசாங்கம் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் தாங்கள் விளையாட மாட்டோம் என அதிரடியாக அறிவித்தது. இந்த நிலையில் இது குறித்து உலகெங்கும் இருந்து பரவலான எதிர்ப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
முடிந்தால் செய்யுங்கள்
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது ” இதனால் உனக்கு என்ன லாபம் கிடைத்து விடப் போகிறது? இது வெறும் ஆணவத்தை காட்டுவதாகத்தான் இருக்கிறது. நீ உண்மையிலேயே இதை செய்வதாக இருந்தால் இந்த விஷயத்தில் பிடிவாதமாக இரு. உனக்கு உண்மையிலேயே தைரியம் இருக்கிறதா? என்று பார்ப்போம்”
“இது பங்களாதேஷுடன் நிற்கிறோம் என்று மக்களை ஏமாற்றுவதற்கான முழுமையான நாடகம். இதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும் என்று விரும்பும் உங்கள் மக்களுடைய கருத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”
ஆசியக் கோப்பையில் ஏன் விளையாடினார்கள்?
“நீங்கள் எதற்காக ஆசியக் கோப்பை தொடரில் விளையாடினீர்கள்? உங்களுக்கு அவ்வளவு தேசபக்தி இருக்கிறது என்றால் நீங்கள் அதை புறக்கணித்து இருக்க வேண்டும்தானே? உங்களுக்கு வருவாய் வேண்டும் என்பதற்காக நீங்கள் அப்போது விளையாடினீர்கள். இப்போது தேவையில்லாமல் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் உங்களுக்கு எந்த உணர்வும் கிடையாது”
இதையும் படிங்க: பாகிஸ்தான் அணி நிச்சயம் இந்தியாவுடன் விளையாடும்.. முக்கிய இந்த 2 காரணங்கள் இருக்கு – வெளியான செய்தி
“ஐசிசி இதற்கு நீதி வழங்கும் வரை காத்திருங்கள். உங்களுக்கு அபராதமும் தடையும் விதிக்கப்படுவது உறுதி. ஒருவேளை நீங்கள் மீண்டும் ஐசிசி போட்டிகளை நடத்த முடியாமல் போகலாம்” என்று கூறியிருக்கிறார்.






