சாதாரண விருது போதாது.. ஆஸ்கார் குடுங்க.. என்ன மாதிரியான நடிப்பு – கவாஸ்கர் அதிரடி பேச்சு

0
582
Virat

இன்று ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விராட் கோலியின் ஆர்சிபி அணியும், கம்பீர் மென்டராக இருக்கும் கேகேஆர் அணியும் மோதிக் கொள்ள இருந்த காரணத்தினால் போட்டிக்கு முன்பாகவே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது. வழக்கம்போல் இவர்கள் காலத்தில் மீண்டும் மோதிக் கொள்வார்களா? ஏதாவது நடக்கும் என்றால் யார் முதலில் ஆரம்பிப்பார்கள்? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்கேற்றார் போல் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரம் இருக்கும் பொழுது கம்பீரின் அதிரடியான பேட்டி ஒன்று வெளியானது. அதில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் கூட, பலமுறை கோப்பையை வென்றவர்கள் போல் நினைத்துக் கொண்டு ஆர்சிபி விளையாடுவார்கள், இந்தக் காரணத்தினாலே, கனவிலும் கூட நான் பெங்களூரு அணியை தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று கம்பீர் பேசி இருந்தார்.

- Advertisement -

அவருடைய இந்த பேச்சு போட்டிக்கு முன்பு வந்து விட்டதால், போட்டி குறித்தான எதிர்பார்ப்புகள் இன்னும் தாறுமாறாக எகிறியது. மேலும் சிஎஸ்கே அணி ரசிகர்களுக்கும் கம்பீருக்கும் ஆகாது என்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் ஆர் சி பி அணிக்கு திடீரென சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். சில மணி நேரங்கள் சமூக வலைதளம் திடீரென பரபரப்பானது.

இந்த நிலையில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி அரை சதம் அடித்து, கம்பீர் பேச்சுக்கு பதில் அடி கொடுத்தது போல அமைந்தது. மேலும் அவர் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்த பொழுதும் கூட தனியாக நின்று அணியை பேட்டிங்கில் காப்பாற்றினார். இதனால் போட்டி பரபரப்பான நிலைக்கு செல்லும் பொழுது, இருவரும் எப்படியும் முட்டிக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தார்கள்.

இப்படியான சூழலில் இரண்டாவது டைம் அவுட் நேரத்தில் விராட் கோலி பேட்டிங்கில் களத்தில் இருந்த பொழுது, கொல்கத்தா அணிக்கு ஆலோசனை சொல்வதற்காக கம்பீர் உள்ளே வந்தார். அப்பொழுது இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட பொழுது, நட்பாக சிரித்து பேசி நலம் விசாரித்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். இது நடந்த ஒரு நிமிடத்திலேயே இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல் தொடரில் வரலாறு மாறியது.. 10வது போட்டியில் ஆர்சிபி தந்த மாற்றம்.. புதிய துவக்கம்

இந்த நிலையில் அப்போது தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ரவி சாஸ்திரி இந்த ஒரு நிகழ்வுக்கு ஃபேர்-பிளேஅவார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது உடனிருந்த கவாஸ்கர் “ஃபேர்-பிளே அவார்டு இவர்கள் இருவருக்கும் கொடுப்பது சாதாரணமானது. அந்த அவார்ட் போதாது. இவர்களுக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும்” என்று நகைச்சுவையாக, அதே நேரத்தில் இதெல்லாம் நடிப்பு என்கின்ற அர்த்தத்தில் கூறினார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.