2024 ஐபிஎல் தொடரில் வரலாறு மாறியது.. 10வது போட்டியில் ஆர்சிபி தந்த மாற்றம்.. புதிய துவக்கம்

0
111
RCB

இந்த வருடம்17ஆவது ஐபிஎல் சீசன் மார்ச் 22ஆம் தேதி நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையே ஆன போட்டியின் மூலமாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெகு எளிதாக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றது.

இதற்கு அடுத்து தன்னுடைய சொந்த மைதானத்திற்கு திரும்பிய ஆர்சிபி அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட தன்னுடைய முதல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் சுமாரான முறையில் கேப்டன்சி செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று மீண்டும் தனது சொந்த மைதானத்தில் கேகேஆர் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு விராட் கோலி 83 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு சுனில் நரைன் 47, வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் எடுத்தார்கள்.

இந்த போட்டியில் 7 முதல் 11 ஓவர்கள் வரையில் ஐந்து ஓவர்களில் ஆர்சிபி அணி பேட்டிங்கில் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே சமயத்தில் பவர் பிளேவில் முதல் ஆறு ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. இடைப்பட்ட ஏழு முதல் 11 ஓவர்களில் மெதுவாக விளையாடியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவதில் ஆர்சிபி அணியின் பலவீனம் தொடர்கிறது.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக நடைபெற்ற ஒன்பது போட்டிகளிலும், சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்று வந்தன. சிஎஸ்கே அணி சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் இரண்டு போட்டிகளையும் வென்று இருந்தன. இதே நிலை எத்தனை போட்டிகளுக்கு தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : 24.75 கோடி மிட்சல் ஸ்டார்க்.. 8 ஓவர் 100 ரன்.. சிஎஸ்கே டேரில் மிட்சலை விட கம்மி விக்கெட்.. வைரல் ஆகும் மேட்டர்

இப்படியான நிலையில் ஐபிஎல் 2004 ஆம் ஆண்டு தொடரில் சொந்த மைதானத்தில் அணிகள் வெற்றி பெறுவது ஒன்பது ஆட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. தற்பொழுது ஆர்சிபி அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்று புதிய துவக்கத்தை நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்படுத்தியிருக்கிறது.