பும்ராவுக்கு பிரச்னை இல்லனா .. என்னோட இந்த ஐடியா நல்லா ஒர்க் ஆகும்.. யூஸ் பண்ணுங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

0
37

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் அடைந்தார். இதனால் அவரது உடல் தகுதியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் பும்ரா குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

காயம் அடைந்த பும்ரா

இந்திய அணியின் மிக முக்கிய துருப்புச் சீட்டாக வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு பும்ரா மிக முக்கிய காரணமாக அமைந்தார். முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி பந்து வீச்சில் மிக முக்கிய பங்காற்றினார்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான பேட்டிங்கால் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அதிலும் பும்ரா 23 ஓவர்கள் பந்து வீசி 61 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது திடீரென சிறிய காயத்தால் அவதிப்பட்டு வெளியேறினார். இன்னும் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் இருக்கும் நிலையில் பும்ரா குறித்து சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த முடிவு தான் சரி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் இந்திய அணிக்காக விளையாடுவதால் பணிச்சுமை மற்றும் அது போன்ற வேறு எந்த விஷயங்களைப் பற்றியும் கேள்விகள் இல்லை. அவருக்கு காயம் ஏற்படாத பட்சத்தில் 5 போட்டிகளிலும் விளையாட வேண்டும். மேலும் இந்தப் போட்டி இரண்டரை நாட்களில் முடிவடைந்துள்ளது.

இதையும் படிங்க:ஒரு கேப்டனா எனக்கே இது தெரியல.. பாவம் இதுல இந்திய அணி என்ன செய்யும் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

ஐந்து நாட்களுக்குச் செல்லாததால் அவருக்கு இன்னும் ஐந்து நாட்கள் இடைவெளி இருக்கிறது. அவருக்கு ஏதேனும் பிரச்சனை இல்லை என்றால் அடுத்த போட்டிகளில் நான்கு அல்லது ஐந்து ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லைக் கொடுக்கலாம் அது சரியாக இருக்கும். நீங்கள் ஒரு விக்கெட் அல்லது இரண்டு விக்கெட்டுகள் எடுத்தால் மட்டுமே அது சரியாக இருக்கும். உங்களது ஐந்தாவது ஓவரில் ஒரு விக்கெட் எடுத்தால் அவருக்கு ஆறாவது ஓவரை தொடர்ந்து கொடுக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -