ஒரு கேப்டனா எனக்கே இது தெரியல.. பாவம் இதுல இந்திய அணி என்ன செய்யும் – ஆஸி கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

0
4864

இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய நம்பிக்கையை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறலாம் என்ற மிகுந்த நம்பிக்கையோடு விளையாடியது. கிட்டத்தட்ட பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு அணியிலும் ஒரே விதமான பங்களிப்பை இரண்டாவது போட்டியில் வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் துருப்பு சீட்டாக இருந்தார்.

முதல் இன்னிங்ஸில் 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் அவரது அபார ஆட்டத்தின் காரணமாக ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் சுலபமாக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டிராவிஸ் ஹெட் எங்கள் அணியில் இருந்ததால் பரவாயில்லை இதுவே எதிரணியில் இருந்திருந்தால் ஒரு கேப்டனாக அவருக்கு பந்து வீசுவது எப்படி என்று தெரியாது என பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா அணிக்காக பல வடிவங்களில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் அவர் ஈர்க்கக்கூடிய வீரராக இருக்கிறார். அவர் இருந்தால் எப்போதும் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அவர் கிரீசில் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து கொண்டே இருக்கிறார். அவர் வித்தியாசமான பகுதிகளில் முயற்சிக்கிறார். ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தால் அவர் அதனை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்.

இதையும் படிங்க:தோல்வி கூட வலிக்கல.. ஆனா நம்ம டீம்ல இதை செய்ய ஒருவர் கூடவா இல்லை – ஆகாஷ் சோப்ரா கேள்வி

எதிரணியிடமிருந்து விளையாட்டை எடுத்துக் கொள்கிறார். ஆப் சைடில் இருந்து ஆன் சைடு திசையில் பந்துகளை விளாசுகிறார். இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருக்கிறோம். ஏனென்றால் அவர் எதிர் அணியில் இருந்தால் ஒரு கேப்டனாக அவருக்கு பந்து வீசுவது எப்படி என்று எனக்குத் தெரியாது” என கூறி இருக்கிறார். டிராவிஸ் ஹெட் எப்போதுமே இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் தனி ஒருவனாக நிலைத்து நின்று ஆஸ்திரேலியா அணிக்காக பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.

- Advertisement -