ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிற நிலையில் பும்ராவை தவிர இந்திய அணியில் மற்ற பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்தது போல செயல்படவில்லை.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது சிராஜ் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்திருக்கிறது. இதில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பும்ரா நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இந்த டெஸ்ட் தொடரில் அவர் 25 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் முகமது ஷமி காயம் காரணமாக விலகிய நிலையில், மற்றொரு முன்னணி பந்துவீச்சாளராக கருதப்படும் முகமது சிராஜ் பங்களிப்பு சொல்லக்கூடிய அளவில் அவ்வளவு சிறப்பாக இல்லை. இந்தத் தொடரில் அவர் மொத்தமாக 13 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கும் நிலையில் பும்ரா ஆதரவற்று தனித்து விடப்பட்டது போல அவரது செயல்பாடு அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முகமது சிராஜின் பங்களிப்பு சரியாக இல்லை என்று அவரிடம் கூறிவிட்டு அணியை விட்டு நீக்க வேண்டும் என சில காட்டமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “முகமது சிராஜ்க்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன். அதாவது நான் இடைவெளி என்கிற அர்த்தத்தில் சொல்லவில்லை. அவரது செயல் திறன் சரியாக இல்லை என்று வெளியேறினார் என கூற வேண்டும். நீங்கள் மிகவும் வெளிப்படையாக பார், உனது செயல்பாடு சரியாக இல்லை. எனவே நீ அணியில் இருந்து நீக்கப்படுகிறாய் என்று கூற வேண்டும். ஓய்வு பற்றி பேசத் தொடங்கும் போது வீரர்களுக்கு தவறான எண்ணம் தோன்றும்.
இதையும் படிங்க:முடிவுக்கு வருகிறதா ரோகித் டெஸ்ட் வாழ்க்கை?. இன்னும் 3 இன்னிங்ஸ்.. ஆஸி முன்னாள் வீரர் சூசக தகவல்
அவர்கள் தங்கள் விளையாட்டை மேம்படுத்த தேவையில்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த ஆடுகளங்களில் உங்களது பந்து வீச்சு சிறப்பாக இல்லை என்று அவரிடம் கூற வேண்டும். அவரிடம் இது நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய விஷயம் தான்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். தற்போது நடைபெற்ற வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிராஜ் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது