முடிவுக்கு வருகிறதா ரோகித் டெஸ்ட் வாழ்க்கை?. இன்னும் 3 இன்னிங்ஸ்.. ஆஸி முன்னாள் வீரர் சூசக தகவல்

0
397

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இதில் இந்திய அணி சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை விரைவில் முடிவடைய போவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிற நிலையில் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடவில்லை. இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி பும்ரா தலைமையில் விளையாடி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்த நிலையில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மேலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் பங்களிப்பும் கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மிக மோசமாக இருந்து வருகிறது. நான்கு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 30க்கும் குறைவான ரன்களை ரோகித் சர்மா அடித்திருக்கும் நிலையில் அவரது மோசமான செயல்பாடு இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது. மேலும் கேப்டன் பொறுப்பிலும் ரோஹித் சர்மா மீது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

- Advertisement -

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம்

இந்த நிலையில் மூன்றாவது முறையாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை என்றால் ரோகித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இதோடு முடிவடையலாம் என்று நம்பத் தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு ரோகித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:586 ரன்.. 3 வீரர்கள் அபார சதம்.. சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி.. ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட்.. முழு விபரம்

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் வாக் ரோகித் சர்மா குறித்த தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறும் போது “ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி மூன்று இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா ஏதேனும் செய்யாவிட்டால் இந்த தொடர் தான் அவருக்கு இறுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். எனவே ரோஹித் சர்மா அடுத்த போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

- Advertisement -