ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் மற்றும் டீம் காம்பினேஷன் குறித்து பேசியுள்ளார்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்த 160 ரன்கள் டார்கெட்டை இந்திய அணி 14.5 ஓவர்களில் எட்டி மாஸ் வெற்றி பெற்றது.கடைசி இரண்டு மேட்ச்களில் இந்திய டீம் காம்பினேஷன் மற்றும் விக்கெட் கண்டிஷன்ஸ்க்கு ஏற்ப சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து வெற்றியை கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “கடைசி மேட்ச் பெர்ஃபார்மன்ஸ் பார்த்துவிட்டு இந்த மேட்ச்க்கு வந்தோம் நாங்கள் ஒரு காம்ப்ரஹென்சிவ் வின் எதிர்பார்க்க இன்று அது சரியாக அமைந்தது. ஆரம்பத்தில் கேப்டன்சி ரோல் கடினமாக இருந்தாலும் இந்த ஜர்னி ரோலர் கோஸ்டர் போலத்தான் இருக்கும் நீங்கள் ஈக்விலிப்ரியம் ஆக இருந்து இந்த மோமெண்ட்டை என்ஜாய் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
தொடர்ந்து அடுத்த மேட்ச் மாற்றங்கள் குறித்து பேசிய அவர் “வெளியில் இருக்கும் பிளேயர்ஸ்க்கு ஆப்பர்சூனிட்டி கொடுத்து அவர்களும் விக்கெட் மற்றும் கண்டிஷன்ஸ்க்கு செட் ஆகி ப்ராக்டீஸ் பெற வேண்டும் அதனால் அடுத்த மேட்ச் காம்பினேஷனில் சின்ன சேஞ்ச் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.