பாபர் உங்க டெக்னிக்கை இப்படி மாத்துங்க.. பாக் வீரர்களே விமர்சனம் செய்யுறப்போ.. ஆதரவு தரும் இந்திய ஜாம்பவான்

0
167

சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டியிடிலும் மோசமான தோல்வியை சந்தித்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாபர் அசாம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்த தொடரில் விளையாடுவதற்கு 15 பேர் கொண்ட குழுவை அறிவித்த போது இருந்தே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி, அதற்குப் பிறகு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் நியூசிலாந்து அணிக்கு எதிராக மெதுவான ஆட்டத்தை விளையாடியும் இந்திய அணிக்கு எதிராக விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினார்.

மேலும் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறி இருப்பது அந்த அணியை மட்டுமின்றி பாபர் அசாம் மீதும் பல்வேறு விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் வீரர்களே பாபர் அசாம் மீது பல்வேறு விமர்சனங்களை கூறி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பாபர் அசாம் தனது பேட்டிங் டெக்னிக்கை எப்படி மாற்றலாம் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் போது “நீங்கள் பேட்டிங் நுட்பம் குறித்து என்னிடம் கேட்டால், நான் பாபர் அசாமிடம் ஒன்றை மட்டும் கூறுவேன். பந்தை எதிர்கொள்ளும் போது அவரது நிலைப்பாடு அகலமாக இருக்கிறது. அவர் க்ரீசில் நிற்கும்போது தனது கால்களுக்கு இடையே இருக்கும் அகலத்தை குறைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். அவர் பந்தை எதிர்கொள்ள முன்னோக்கியோ அல்லது பின் நோக்கியோ நகரும் போது எந்த விதமான சங்கடமும் இருக்காது.

இதையும் படிங்க:பும்ராவை இதுக்குதான் நம்பர் 1 பவுலர்னு சொல்றேன்.. மற்ற பவுலர்ஸ்க்கு இருக்குற இந்த குறை அவரிடம் இல்லை – பாக் முகமது அமீர்

இரண்டாவதாக உங்கள் இடைவெளியை மூடும் போது பந்தை எதிர்கொள்வதற்கான உங்கள் உயரமும் அதிகரிக்கிறது. நீங்கள் உயரமாக நிமிர்ந்து நிற்கும்போது பந்தை எளிதாக சமாளிக்க முடியும். அதற்குப் பிறகு நீங்கள் ரன்கள் அடிப்பதற்கான திறமை எளிதாக வந்து விடும். அப்படி மட்டும் அவர் செய்துவிட்டால் அது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் அவரது பேட்டிங் கண்டு மகிழ்ச்சியடையும். ஏனென்றால் பாபர் அசாம் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -