ஆஸிக்கு எதிராக இந்தியா எவ்வளவு டெஸ்டில் வெல்லும்.. கவாஸ்கர் சொன்ன ஆருடம்!

0
667

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கவாஸ்கர் கூறியுள்ளார். வரும் 17ஆம் தேதி தொடங்க உள்ள டெல்லி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நல்ல தொடக்கத்தை வழங்க வேண்டும்.

- Advertisement -

மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் பெரிய இன்னிங்ஸ் விளையாடி ரன் சேர்க்க வேண்டும். ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் தோற்ற விதத்தை பார்த்தால் இந்த தொடரில் அவர்கள் 4-0 என்ற கணத்தில் படுதோல்வி சந்திப்பார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் போதுமான ரன்களை அடிக்க வேண்டும். இல்லையெனில் இந்திய அணி தான் தொடரை முழுமையாக வெல்லும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று கேஎல் ராகுல் கடந்து இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருவதாக கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அவர் டெஸ்ட் போட்டியில் கடினமான ஆடுகளத்தில் சதம் அடித்ததை குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், கே எல்த ராகுல் திறமைக்காகவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என  கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே எல் ராகுலுக்கு இந்திய அணி நிர்வாகம் கண்டிப்பாக வாய்ப்பு வழங்கும் என்று குறிப்பிட்டுள்ள கவாஸ்கர் அதிலும் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் பார்மில் இருக்கும் சுப்மன் கில் கொண்ட வீரர்களை சேர்க்கலாம் என யோசனை வழங்கியுள்ளார்.

கவாஸ்கரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏதேனும் ஒரு போட்டியில் ராகுல் விளையாடி விட்டு அடுத்த பத்து போட்டிகளில் அமைதியாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் மற்றொரு தொடக்க வீரரான மாயங் அகர்வால், ரஞ்சி கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இதனால் ராகுலுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -