இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் முகமது சிராஜ் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இரண்டு அணிகளுமே தலா ஒரு வெற்றியைப் பெற்று இருப்பதால் மீதமுள்ள மூன்று போட்டிகள் தொடரை நிர்ணயிக்கப் போகும் போட்டிகளாக அமைய உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் கடைசி வரிசை பேட்ஸ்மேன்களுக்கு பவுன்சர் தாக்குதலை தொடுத்தார்கள்.
குறிப்பாக டிராவிஸ் ஹெட் முகமது சிராஜின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறியதால் சிராஜின் செயல்பாடு அப்போது கவனிக்கத்தக்க வகையில் அமைந்தது. இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய பவுலர்கள் சிராஜுக்கு பவுன்சர் தாக்குதலை தொடுத்து போலந்து பந்துவீச்சில் வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இதனை கவனித்த சுனில் கவாஸ்கர் சிராஜ் அடுத்த டெஸ்ட் போட்டிகளில் இரட்டிப்பாக ஆஸ்திரேலியா வீரர்களுக்கு கொடுப்பார் என்று கூறியிருக்கிறார்.
சிராஜ் இரட்டிப்பாக திரும்ப கொடுப்பார்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” சிராஜ் இந்திய அணியில் பத்தாவது வரிசையில் வரக்கூடிய பேட்ஸ்மேன். நீங்கள் அவருக்கு பவுன்சர் பந்துகளை வீசினால் அவர் நிச்சயமாக போராடுவார். எனவே அவரை குறை கூற முடியாது. என்ன நடந்தாலும் ஆஸ்திரேலியர்கள் குற்றம் சாட்டப்பட்டதாக எனக்கு தோன்றுகிறது.அத்தகைய பந்துகளை வீசி சிராஜை வெளியேற்ற வைத்ததால் அடுத்த போட்டிகளில் சிராஜ் திரும்ப செய்வார் என எதிர்பார்க்கிறார்கள்.
இதையும் படிங்க:இன்னு 3 வருஷம்தான்.. ஜெயிஷா இதுல வேற மாறி இருப்பார்.. ரொம்ப திறமை இருக்கு – ரவி சாஸ்திரி கருத்து
ஆனால் அது குறித்து கவலைப்பட வேண்டிய எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன். கபாவில் பந்து சிராஜ் கையில் இருக்கும் போது அவன் அதை இரட்டிப்பாக அவர்களுக்கு திரும்ப கொடுக்கப் போகிறான். எனவே இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். இந்த இரண்டு அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டி வருகிற 14-ஆம் தேதி பிரிஸ்பானில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.






