இன்னு 3 வருஷம்தான்.. ஜெயிஷா இதுல வேற மாறி இருப்பார்.. ரொம்ப திறமை இருக்கு – ரவி சாஸ்திரி கருத்து

0
24

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக செயல்பட்டு கொண்டிருந்த ஜெய்ஷா தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஜெய்ஷா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐசிசியின் தலைவர் ஆன ஜெய்ஷா

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக 36 வயதான ஜெய்ஷா செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இந்த மாதத்தின் தொடக்கத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னேற்றத்திற்காக பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். இவர் செயலாளராக செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில் தான் இந்திய உள்நாட்டு வீரர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை இந்தியாவில் இருந்து துபாயில் மாற்றம் செய்து அங்கு வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இங்கிலாந்து உள்பட பல முன்னணி நாடுகள் தங்களது பிரிமியர் லீக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டிய நேரத்தில் ஜெய்ஷா ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் ஒரே விதமான டிக்கெட் கட்டணத்தை கொண்டு வந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. ஜெய்ஷா ஒரு இளைஞன். நான் பயிற்சியாளராக இருந்தபோது ஜெய்ஷா பிசிசிஐ செயலாளராக செயல்பட்டு கொண்டிருந்த நேரத்தில் அவரது செயல்பாடு என்னை மிகவும் ஈர்த்தது. அவரிடம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவரைச் சுற்றி நடக்கும் விஷயங்களை எளிதாக உள்வாங்கிக் கொள்வார். மேலும் அவர் எல்லோரையும் ஒருசேர அழைத்துச் செல்வது அற்புதமானது.

இதையும் படிங்க:பும்ராவுக்கு பிரச்னை இல்லனா .. என்னோட இந்த ஐடியா நல்லா ஒர்க் ஆகும்.. யூஸ் பண்ணுங்க – சுனில் கவாஸ்கர் கருத்து

அவர் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்வார் மற்றும் ஐசிசியில் அற்புதம் செய்வார் என்று நினைக்கிறேன். அவர் எப்படி குறுகிய காலத்தில் ஐசிசியின் தலைவராக பொறுப்பேற்றார் என்று பலரும் ஆச்சரியப்படுவார்கள். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து ஐசிசியின் கஜானாவை காட்டும்போது பலரும் ஆச்சரியம் அடைவார்கள் என்று நினைக்கிறேன்.அந்த அளவிற்கு வர்த்தகரீதியாக நல்ல அனுபவம் கொண்டவர்” என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.

- Advertisement -