தற்போதுள்ள பாகிஸ்தான் அணியை இந்திய இரண்டாம் கட்ட அணி தோற்கடிக்கும் என சுனில் கவாஸ்கர் அதிரடியாக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால் தொடர் தொடங்கி ஆறாவது நாளில் அரை இறுதி வாய்ப்பை இழந்து பாகிஸ்தான் அணி வெளியேறியிருக்கிறது. இது அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் அந்த நாட்டு முன்னாள் வீரர்கள் அனைவரையும் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி கோபப்படுத்தி இருக்கிறது.
இந்திய பி அணி தோற்கடிக்கும்
இந்த நிலையில் தற்போதுள்ள பாகிஸ்தான் வீரர்கள் திறமையில் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும், அவர்களிடம் சிறப்பான விஷயங்கள் எதையும் பார்க்க முடியவில்லை எனவும், அவர்களை இந்திய பி அணி தோற்கடிக்கும் என்றும், சி அணி கூட தோற்கடிக்கலாம் எனவும் சுனில் கவாஸ்கர் பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” இந்திய பி அணி பாகிஸ்தான் அணியை தோற்கடிக்கும் என்று நான் நினைக்கிறேன். சி அணி அதை செய்ய முடியுமா இல்லை முடியாதா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி இருக்கும் நிலைமைக்கு நிச்சயம் இந்திய பி அணி அவர்களை தோற்கடிக்கும்”
ரிஸ்வான் தந்த ஆச்சரியம்
“இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் உள்ளே வந்த முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். எனவே இந்த முறை நல்ல இன்டெண்ட் காட்டி விளையாடப் போகிறார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அப்படியான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அவர்கள் ரன் எடுக்கும் முயற்சிக்கு வந்த பொழுது இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் தங்களது பெரும்பாலான ஓவர்களை முடித்து இருந்தார்கள்”
இதையும் படிங்க : நடத்துறது பாகிஸ்தான் ஆனா நன்மை இந்திய அணிக்கு.. இதெல்லாம் நியாயமே கிடையாது – நாசர் ஹுசைன் விமர்சனம்
“தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெஞ்ச் பலம் இல்லாதது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. அவர்களுக்கு என்று இயல்பான ஒரு கிரிக்கெட் திறமை இருந்தது. அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பானவர்களாக இருந்திருக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்கள் சிறப்பு திறமையோடு காணப்பட்டார்கள். இன்சமாம் உல் ஹக் தான் நின்று விளையாடும் முறையை இன்னொரு இளம் வீரருக்கு பரிந்துரைக்க மாட்டார். அப்படிப்பட்ட தொழில்நுட்பத்தில் பின்தங்கிய இன்சமாம் தனிப்பட்ட திறமையால் சிறந்தவராக இருந்தார். ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அப்படி யாரும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.






