நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாய் மைதானத்தில் மட்டுமே விளையாடி வருவது யாரையும் விட இந்திய அணிக்கு பெரிய நன்மையை கொடுப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வெளிப்படையாக விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. இதன் காரணமாக ஹைபிரிட் மாடலில் மற்ற அணிகள் அனைவரும் பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மற்றும் தன்னுடைய போட்டிகளை துபாய் சர்வதேச மைதானத்தில் விளையாடிக் கொண்டு வருகிறது.
நடத்துவது பாகிஸ்தான் நன்மை இந்தியாவுக்கு
இது குறித்து நாசர் ஹுசைன் கூறும்பொழுது “இந்திய அணி தற்பொழுது ஒரே மைதானமாக துபாயில் மட்டுமே விளையாடுவது பெரிய நன்மையாக மாறி இருக்கிறது. இந்த தொடரில் வேறு எந்த அணிக்கும் கிடைக்காத நன்மை இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. நான் இது தொடர்பாக ஒரு டிவிட்டை பார்த்தேன், பாகிஸ்தான் தொடரை நடத்துகிறது ஆனால் ஹோம் அட்வான்டேஜ் இந்திய அணிக்கு கிடைக்கிறது என்று எழுதப்பட்டிருந்தது. இந்திய அணி எங்கும் பயணம் செய்ய வேண்டியது இல்லை அவர்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூம் மாறப்போவதில்லை”
“இந்திய அணிக்கு ஆடுகளம் எப்படி இருக்கும்? என்று தெரியும். அவர்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் அமர்ந்திருக்கிறார்கள். மேலும் அங்கு அவர்கள் மொத்தம் ஐந்து போட்டிகளில் விளையாடப் போகிறார்கள் என்று தெரியும். அதில் அவர்கள் வெற்றி பெற்றால் மேலும் ஒரு உலகளாவிய கிரிக்கெட் தொடரை வெல்லுவார்கள்”
இதுதான் முக்கியமான நன்மை
“மேலும் இந்திய அணி நிர்வாகம் தங்கள் அணியை தேர்ந்தெடுப்பதில் மிகவும் புத்திசாலியாக இருந்தார்கள். துபாய் மைதானம் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். எனவே அவர்கள் தங்களிடம் இருக்கும் எல்லா சுழல் பந்துவீச்சாளர்களையும் தேர்ந்தெடுத்தார்கள். இந்திய ஊடகங்கள் அப்பொழுது ஏன் கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்கவில்லை என்று கேள்விகள் கேட்டது. இப்போது அதற்கான பதிலை பார்க்கலாம்”
இதையும் படிங்க : ஒமன் அமெரிக்கா டீம விட இதுல பாகிஸ்தான் மோசம்.. 6 பேரை தூக்கிட்டு இதை செய்யுங்க – வாசிம் அக்ரம் விமர்சனம்
“மேலும் இங்கிலாந்து போன்ற ஒரு அணி அரையர்களுக்கு சென்றால் அவர்களிடம் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளர் மட்டும்தான் இருப்பார். பாகிஸ்தான் கூட அப்படித்தான் வைத்திருந்தது. ஏனென்றால் அவர்கள் மொத்தம் மூன்று மைதானங்களில் விளையாட வேண்டி இருப்பதால் அப்படியான அணியை தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் துபாய் மைதானத்திற்கு தேவையான சுழல் பந்துவீச்சாளரை அணியில் வைக்க முடியாது. இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் தேவையான அணியை வைத்துக் கொள்ள முடிகிறது” என்று கூறி இருக்கிறார்.






