33/3.. மீண்டும் சொதப்பிய கில்.. சிறப்பான வலை விரித்த ஆண்டர்சன் மார்க் வுட்.. ரசிகர்கள் கோபம்

0
105
Gill

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்றாவது போட்டி நடைபெற்று வரும் ராஜ்கோட் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிக சாதகமாக இருக்கும் என அனைவரும் கணித்திருந்தார்கள்.

ஆனால் போட்டி தொடங்கிய சில ஓவர்களிலேயே வழக்கமான பேட்டிங் சாதகமான ஆடுகளம் இல்லை என்று தெரிந்து விட்டது. பந்து கொஞ்சம் நின்று வருகிறது. மேலும் பந்து பவுன்ஸ் ஆவதிலும் கொஞ்சம் மாறுபாடுகள் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவம் மற்ற பேட்டிங் யூனிட், ஆடுகளத்தை புரிந்து கொள்ளும் முன்பாகவே மிக வேகமாக சரிந்து இருக்கிறது.

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் பட்டிதார் 5 என இந்திய அணி 33 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து விட்டது.

இதில் இதில் தவிர மற்ற இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்தது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் கில் விளையாடிய எல்லா பந்திலும் அவருடைய தடுமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.

- Advertisement -

கில் எந்த இடத்திலும் நம்பிக்கையாக இருப்பதாகவே தெரியவில்லை. எந்த பந்து உள்ளே வருகிறது வெளியே போகிறது என்பதில் அவருக்கு மிகப்பெரிய குழப்பம் இருந்தது.

இதற்காகவே ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு ஒரு சிங்கிள் கொடுத்து, கில்லை வைத்து ஆண்டர்சன் மற்றும் மார்க் வுட் மிகச் சிறப்பான நெருக்கடியை கொடுத்தார்கள்.

இதில் மார்க் வுட் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்து,அடுத்த பந்தை வெளியே எடுக்க, என்ன செய்வதென்று தெரியாத கில், பேட்டை மிக கடினமாக முன்னே கொண்டு வந்து நீட்டி, எட்ஜ் எடுத்து கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து ரன் இல்லாமல் வெளியேறினார்.

எதிரணி சிறப்பாக பந்து வீசும் பொழுது ஆட்டம் இழப்பது என்பது சகஜமான ஒன்றுதான். ஆனால் நாம் எந்த வகையில் ஆட்டம் இழக்கிறோம் என்பதுதான் கிரிக்கெட்டில் முக்கியமானது.

இதையும் படிங்க : முழு தொடரிலும் விளையாடாத விராட் கோலி.. சேவாக் உணர்ச்சிகரமான பேச்சு

கில் ஆட்டமிழக்கும் முறை மிகவும் மலிவானதாக இருக்கிறது. அவருடைய பேட்டிங் டெக்னிக்கில் அடிப்படையிலேயே சில பிரச்சனைகள் இருக்கிறது. இதுதான் கவலை தரக்கூடிய விஷயமாக அமைகிறது. அடுத்து இவரது விஷயத்தில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்று பார்க்க வேண்டும்.