வீடியோ.. கிரிக்கெட்டை தாண்டி கால்பந்திலும் தொடரும் இந்தியா பாகிஸ்தான் பங்காளி சண்டை.. சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல்

0
391
Football

இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் எஸ்ஏஎஃப்எஃப் கால்பந்து தொடரில் முதல் போட்டி நேற்று பெங்களூர் ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் துவங்கியது.

இந்தப் போட்டியில் முதல் பாதியில் இந்திய அணி இரண்டு கோல்களை அடித்து மிகவும் வலுவான நிலையில் இருந்தது. இந்த இரண்டு கோல்களையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுனில் சேத்ரி அடித்தார்!

- Advertisement -

இதற்கு அடுத்து இரண்டாவது பாதியில் கிடைத்த ஒரு பெனால்டி வாய்ப்பில் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்து தனது ஹார்ட்ரிக் கோலை பதிவு செய்தார். மேலும் ஒரு இந்திய வீரர் கோல் அடிக்க, இந்திய அணி போட்டி நேரத்தின் முடிவில்
4-0 என அபார வெற்றி பெற்றது.

கிரிக்கெட் களத்தை எல்லாம் ஓரத்தில் வைக்கும் அளவுக்கு நேற்று இந்த போட்டி தீவிரதன்மையோடும் பரபரப்போடும் பெங்களூரில் நடைபெற்று முடிந்திருக்கிறது. கால்பந்துக்கு உரிய எல்லா நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன.

நேற்று ஆட்டத்தின் முதல் பாதியில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பந்தை ப்ரோ இன் செய்யும் பொழுது, அவரது கையில் இருந்து இந்திய பயிற்சியாளர் ஸ்டிமாக் பந்தை பறிக்க, உடனே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே இரு அணி வீரர்களும் பிரச்சனையை சரி செய்து கொண்டு கிளம்பினார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய பயிற்சியாளருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டு அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்பு துணைப் பயிற்சியாளர் மகேஷ் கவுல டச் லைனில் இருந்து இந்திய அணியை வழிநடத்தினார். மேலும் இந்தப் போட்டியில் இந்திய வீரர் ஜிங்கன் மற்றும் பாகிஸ்தான் வீரர் நபி ஆகியோருடன் பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளருக்கும் மஞ்சள் அட்டை இந்த விவகாரத்தில் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது!