“அடிச்சு சொல்றேன்.. கோலி டி20 உலக கோப்பையில் விளையாடுவார்.. காரணம் வித்தியாசமானது” – ஸ்டூவர்ட் பிராட் கருத்து

0
334
Virat

தற்போது விளையாட்டு குறித்து இந்திய சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக, விராட் கோலி டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா இல்லை நீக்கப்படுவாரா? என்பது மாறி இருக்கிறது.

இன்று காலை முதல் விராட் கோலி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற மாட்டார் என்கின்ற செய்தி தீ போல பரவி வந்து கொண்டிருக்கிறது. மாறிவரும் டி20 கிரிக்கெட் அணுகுமுறைக்கு விராட் கோலியின் பேட்டிங் சரி வராது என்றும், எனவே பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், விராட் கோலி டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் நீக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருந்தார். மேலும் அவரது பேட்டிங்கில் பழைய நம்பிக்கை தெரிகிறது. அவரை ஆரம்ப காலகட்டங்களில் பார்த்தது போல, விக்கெட்டை தரமாட்டேன் என்கின்ற பிடிவாதத்தோடு ரன்களை குவித்து வருவதை பார்க்க முடிகிறது.

மேலும் இந்த முறை அமெரிக்காவில் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு பகுதி நடக்க இருக்கின்ற காரணத்தினால், சர்வதேச அளவில் பிரபலமான அனைத்து வீரர்களும் பங்கு பெறும் பொழுதுதான், அது பெரிய அளவில் போய் சேரும். மேலும் அமெரிக்காவில் டி20 உலக கோப்பையை நடத்துவதே அந்த நாட்டில் கிரிக்கெட்டை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்காகத்தான்.

இப்படி இருக்கும் பொழுது விராட் கோலி போன்ற ஒரு லெஜென்ட் வீரரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அணியிலிருந்து நீக்காது என்றும் ஒரு பக்கம் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கடுத்த தலைமையிலான தேர்வு குழு எந்தவிதமான அதிரடி நடவடிக்கைக்கும் தயாராக இருக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. எனவே இதில் என்ன மாதிரி முடிவுகள் எடுக்கப்படும் என்பது குறித்து நிறைய குழப்பங்கள் இருந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : “ரூம்ல தனியா அழுதுகிட்டு இருந்தேன்.. ரோகித் செஞ்ச காரியத்தை மறக்கவே மாட்டேன்” – அஸ்வின் உருக்கமான பேட்டி

இந்த நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது ” விராட் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இருக்க மாட்டார் என்பது உண்மையாக இருக்க முடியாது. ஏனென்றால் விளையாட்டை வளர்க்கும் நோக்கில் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பையை நடத்தும் பொழுது, ரசிகர்களின் பார்வையில் இருந்து பார்த்தாலே விராட் கோலி நீக்கப்பட மாட்டார் என்பது தெரியும். மேலும் நியூயார்க்கில் வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி இருக்கிறது. இப்படியான சூழலில் அந்த முடிவுக்கு செல்ல மாட்டார்கள். எனவே விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவார்” எனக் கூறியிருக்கிறார்.