“விராட் கோலி.. இது ஒரு அவமானம்.. இப்படி நடக்கக்கூடாது”- ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

0
171
Virat

இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட போது, அவர்களுடைய அதிரடியான பாஸ்பால் அணுகுமுறை, சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான இந்தியாவில் எப்படி எடுபடும்? என்கின்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் இருந்தது.

அதே சமயத்தில் இந்த முறை இந்த டெஸ்ட் தொடருக்கு வழங்கப்பட்டுள்ள 5 மைதானங்களும், வழக்கமாக இந்தியா டெஸ்ட் விளையாடும் மைதானங்கள் இல்லை. மேலும் இந்தத் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு போட்டிகளின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு வசதியாகவே இருந்தன.

- Advertisement -

மூன்றாவது போட்டி நடக்கும் குஜராத் ராஜ்கோட் மைதானத்தின் ஆடுகளமும் பேட்டிங் செய்வதற்கு மிகமிக சாதகமானது. கிரிக்கெட் விமர்சகர்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறும் அளவுக்கு ஆடுகளம் இருக்கிறது.

இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறை தற்போதைய இந்திய ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய அதிரடியான பேட்டிங் முறையால் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதே சமயத்தில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, முகமது சமி என பெரிய வீரர்கள் இல்லாமலே வெற்றி பெற்று தொடரையும் தற்பொழுது சமன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி இல்லாதது குறித்து பேசி உள்ள ஸ்டூவர்ட் பிராட் “விராட் கோலி இல்லாமல் இருப்பது, இவ்வளவு பெரிய தொடருக்கு ஒரு அவமானம். ஆனால் எல்லாம் தாண்டி கடைசியில் குடும்பம்தான் முன்னுரிமை தர வேண்டிய விஷயம். விராட் கோலி தரமான ஒரு வீரர்.

அதே சமயத்தில் அவர் இல்லாத காரணத்தினால் இளைஞர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பை பெரும் இந்திய இளைஞர்களும் ஏதாவது ஒரு இடத்தில் பேட்டிங்கில் எழுந்து நின்று இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

இதையும் படிங்க : “ஹர்திக் பாண்டியா போகட்டும்.. இந்த தமிழக வீரரால் அந்த இடத்தை நிரப்ப முடியும்” – கவாஸ்கர் கணிப்பு

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் போட்டித் தன்மை கொண்டதாக இருந்தது. மிகவும் பரபரப்பான முறையில் நடைபெறும் இங்கிலாந்து இந்திய டெஸ்ட் தொடரில் இது ஒன்று. முதல் டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணியின் பேட்டிங் முறை இந்தியாவில் தற்பொழுது சாதகமாக இருக்கிறது. தற்பொழுது விராட் கோலி அணியில் இல்லாததால் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருக்கிறது” என கூறியிருக்கிறார்.