“ஹர்திக் பாண்டியா போகட்டும்.. இந்த தமிழக வீரரால் அந்த இடத்தை நிரப்ப முடியும்” – கவாஸ்கர் கணிப்பு

0
267
Gavaskar

இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஐபிஎல் காய்ச்சல் பரவ ஆரம்பித்துவிட்டது. ரசிகர்களிடம் தொற்றிக் கொள்வதற்கு முன்பாகவே, விளையாடக்கூடிய வீரர்களிடம் தொற்றிக் கொண்டிருக்கிறது. அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டை புறக்கணித்து ஐபிஎல் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கத்தில் இந்திய முன்னாள் வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய தொடங்கி இருக்கிறார்கள். தொலைக்காட்சிகளில் இப்பொழுதே ஐபிஎல் குறித்தான கலந்தாய்வுகள்முன்னாள் வீரர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்த வகையில் சில நாட்களாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் சுனில் கவாஸ்கர் மற்றும் இர்பான் பதான் இருவரும் பத்து ஐபிஎல் அணிகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆழமாக தங்களுடைய கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த வகையில் நேற்று கவாஸ்கர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன என்பது குறித்து தன்னுடைய ஆழமான பார்வையை முன்வைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் வேகப்பந்து பேச்சாளர் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து வந்திருக்கிறார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்று விட்டதால், வெளிநாட்டு வீரரான ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஓமரசாயை வைத்து அவரது இடத்தை நிரப்புவார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் கவாஸ்கர் இதற்கு வேறு ஒரு கோணத்தில் பதில் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது “தமிழக வீரரான விஜய் சங்கர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பார். ஹர்திக் பாண்டியா ஒரு சூழ்நிலைக்கு எப்படி மாறினார்? அப்பொழுது எப்படி பந்து வீசினார்? என்று இதிலிருந்து விஜய் சங்கர் கற்றுக் கொண்டிருந்தால், ஹர்திக் பாண்டியா என்ன செய்ய முடியுமோ அதையே இவராலும் செய்ய முடியும்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. நியூசிலாந்துக்கு தண்ணி காட்டும் அனுபவம் இல்லாத தென் ஆப்ரிக்கா.. முதல் நாளில் அபார ஆட்டம்

ஹர்திக் பாண்டியா செய்த அத்தனையையும் இவராலும் செய்ய முடியாவிட்டாலும், அதிலிருந்து ஒரு 80 சதவீதத்தை விஜய் சங்கர் செய்ய முடிந்தால், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அது அற்புதமானதாக அமையும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -