CWC23.. நாளை பாகிஸ்தானுக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI.. 2 மாற்றங்கள்!

0
16943

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது!

எல்லா ஐசிசி போட்டிகளிலுமே மிகப்பெரிய வருமானத்தை தரக்கூடிய போட்டியாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளக்கூடிய போட்டிதான் அமைந்திருக்கும். தற்பொழுது தொடர் இந்தியாவில் நடக்கின்ற காரணத்தினால் இன்னும் கூடுதல் மதிப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் என ஒரு பெரிய மற்றும் சிறிய அணியை வீழ்த்தி இருக்கிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் நெதர்லாந்து மற்றும் இலங்கை என இரண்டு சிறிய அணிகளை வீழ்த்தி இருக்கிறது.

நாளை நடைபெறுகின்ற போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கான தங்களது வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் அணியை வென்றால், அதற்கு அடுத்து இருக்கக்கூடிய ஆறு போட்டிகளில், மூன்று போட்டிகள் நெதர்லாந்து பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுடன் அமையும். இந்த போட்டிகளில் வென்றாலே இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அகமதாபாத் மைதானத்தில் இன்று ஒரு மணி நேரம் பயிற்சி செய்தார். நாளை கூடுதல் நேரம் பயிற்சி செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

மேலும் அகமதாபாத் மைதானத்தை பொறுத்தவரை இரண்டாவதாக பந்து வீசும் பொழுது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் நல்ல பலன் இருக்கும். மேலும் இந்த மைதானம் ஐபிஎல் தொடரில் முகமது சமிக்கு மிகவும் உகந்த மைதானம். புதிய பந்தில் இங்கு சிறப்பான முறையில் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணியை எடுத்துக் கொண்டால், அவர்களை சிறந்த பந்து வீச்சு தாக்குதலை வைத்து தாக்கினால், எளிமையாக எட்டக்கூடிய ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விட முடியும். அப்படியான கொஞ்சம் பலமற்ற பேட்டிங் யூனிட்டைதான் அவர்கள் வைத்திருக்கிறார்கள்.

எனவே நாளைய போட்டியில் முகமது சமிக்கு வாய்ப்பு தருவது சரியான ஒன்றாக இருக்கும். கில் இடம்பெறாவிட்டால் வழக்கம்போல் இசான் கிஷான் இடம் பெறுவார். கில் இடம்பெற்றால் நடு வரிசையில் இஷான் கிஷானுக்கு இடம் தருவது சரியாக இருக்கும்.

ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கேஎல்.ராகுல், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சமி மற்றும் முகமது சிராஜ்.