டி20 உலககோப்பையில் வரவிருக்கும் தெறி ரூல்.. 60 நொடி.. 5 பெனால்டி ரன்.. இனி ஏமாத்தவே முடியாது

0
163
WC

விளையாட்டுகளில் கிரிக்கெட் மட்டுமே அதன் வடிவத்தில் இருந்தும் அதன் விதிமுறைகளிலும் மிகப் பெரிய மற்றும் நிறைய மாற்றங்களை உள்வாங்கி, ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக கிரிக்கெட் அந்தந்த காலகட்டத்தின் தேவைக்கேற்ப சுவாரசியப்படுத்தப்பட்டு கொண்டே வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் ஆரம்பித்து இன்று 20 ஓவர் கிரிக்கெட் வரை அதிகாரப்பூர்வமாக ஐசிசி-யால் விளையாடப்படுகிறது.

மேலும் கிரிக்கெட்டில் எப்பொழுதும் விதிகளை மாற்றுவதற்கான தன்மை இருந்து கொண்டே இருக்கும். விதிகளை மாற்றுவதன் மூலம் கிரிக்கெட்டை தேவைக்கு தகுந்தது போல் சுவாரசியப்படுத்திக் கொண்டே இருக்க முடியும். இது ரசிகர்களுக்கு ஒவ்வொரு முறையும் புது அனுபவத்தை தந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

உதாரணமாக கடந்த ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி ஒரு விதி அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினாலே, ஒரு அணி டாஸ் முடிவுக்கு பின்னால் அதற்கு தகுந்தது போல், தங்களது பிளேயிங் லெவனை கொடுக்கலாம் என்கின்ற விதியும் கொண்டுவரப்பட்டது.

இம்பேக்ட் பிளேயர் விதியால் போட்டித் தன்மை மிகவும் அதிகரித்தது. அதேபோல் இரண்டு பிளேயிங் லெவன் கொடுக்கப்படலாம் என்கின்ற காரணத்தினால், பனிப்பொழிவு போன்ற காரணத்தினால் ஆட்டத்தின் முடிவுகள் தீர்மானிக்கப்படாமல் இருப்பதற்குஇது உதவியாக இருந்தது. இதனால் ரசிகர்களுக்கு தரமான கிரிக்கெட் கிடைக்கிறது.

தற்பொழுது ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் பெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கின்ற டி20 உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தும் விதமாக புதிய முக்கியமான விதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அந்த விதியின் பெயர் ஸ்டாப் க்ளாக் ரூல்.

- Advertisement -

ஸ்டாப் கிளாக் ரூலின் முக்கிய அம்சங்கள்:

ஒவ்வொரு ஓவர் முடிந்ததும், நொடிகள்அடிப்படையில் இயங்கும் டைமர், கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் ஓடத் தொடங்கும்.

பந்து வீசிக் கொண்டிருக்கும் அணிக்கு 60 வினாடிகள் ஒரு ஓவர் முடிந்ததும் கொடுக்கப்படும். இந்த 60 வினாடிகளுக்குள் பந்து வீசும் அணி அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசி விட வேண்டும்.

ஒரு போட்டியில் ஒரு ஓவர் முடிந்ததும் 60 வினாடிகளுக்குள் அடுத்த ஓவரின் பந்து வீசப்படாமல் இருந்தால், கள நடுவர்களிடமிருந்து இரண்டு முறை எச்சரிக்கைகள் வரும்.

இரண்டு எச்சரிக்கைகளை கள நடுவர்கள் வழங்கிய பிறகும், பந்து வீசும் அணி தொடர்ந்து அந்த குறிப்பிட்ட போட்டியில் தாமதப்படுத்தினால், பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும்.

இதையும் படிங்க : சர்பராஸ் கான் தம்பி லெவல் என்ன தெரியுமா?.. உள்ள வந்தப்பயே உணர்ந்தோம்- சர்துல் தாக்கூர் பேச்சு

மேலும் பந்துவீச்சின் போது மூன்றாவது நடுவரிடம் ரிவியூ செல்கின்ற பொழுது, இந்த டைமர் நிறுத்தப்படும். ரிவ்யூ செய்கின்ற நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விதியின் காரணமாக, போட்டி குறிப்பிட்ட நேரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும். மேலும் ஆலோசனை செய்வதற்கும், நிறுத்தி நிதானமாக முடிவு செய்வதற்கும், நேரம் இல்லாமல் இருப்பதால், கேப்டன்கள் முடிவெடுப்பதில் மிக வேகமாக செயல்பட வேண்டிய அவசியம் உருவாகிறது. இதில் சிறந்த கேப்டன்கள் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு!